கொல்கத்தா: தாடி வைத்தற்க்காக தீவிரவாதி என்று கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர். இஸ்லாமியர் என்பதால் வேலையை இழந்து தவிக்கிறார்.. கொல்கத்தாவில் அதுனிக் குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சுரங்க பிரிவு மேலாளராக ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் முகமது இஸ்மாயில். கடந்த ஆண்டு இவர் ஹஜ் புனித யாத்திரை முடித்துவிட்டு மே மாதம் தாடுயுடன் திரும்பியுள்ளார், இதற்க்குப் பிறகுத் தான் அலுவலகத்து அயோக்கியர்கள் தங்களது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளனர், அதையும் பொறுத்துக் கொண்டு ஆறு மாதம் பாதி சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்து இருக்கிறார், பிறகு மேல் அதிகாரி அகர்வாலிடம் சென்று ஏன் சம்பளத்தை பாதியாக குறைத்தீர்கள் என்றும், பிடித்து வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை தருமாறும் கேட்டுள்ளார்,,
Ismail at a function organised by Zee Group for `Business Bajigar’ Award in 2006.
அதற்க்கு மேல் அதிகாரி தாடி வைத்திருப்பதால் நீ ஒரு தீவிரவாதி என்றும் உன்னை வேலையை விட்டு நீக்குகிறோம் என்றும் அவமானப்படுத்தி நீக்கி உள்ளான். தற்போது அவரது வேலையும் பறிபோய் உள்ளது.
இது தொடர்பாக இஸ்மாயில் மனித உரிமை ஆனையம், சிறுபான்மையினர் ஆனையம், முதல்வர் அலுவலகம் மற்றும் போலிசார் ஆகியோரிடம் புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்களாம். இதைத் தொடர்ந்து இஸ்மாயில் கொல்கத்தா உயர் நீதுமன்றத்தை அனுக உள்ளார். இது போன்ற செயல்படும் நிறுவங்களை கண்டிப்பாக நீதிமன்றங்கள் கடுமையான சட்டங்கள் அமல் படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக