Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 ஜூன், 2015

மேலப்பாளையத்தில் நடந்தது என்ன..!போரட்டம் வெடிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவிப்பு…!


நேற்று(01.06.2015) மாலை நெல்லை  மாவட்டம் மேலப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிஎன்டிஜேயின் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மீது வேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மோதியது.



அதில் ஷம்சுல்லுஹா அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக சம்பவம் நடந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டது. இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷேக் நிதானமாக நடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல கடும் சொற்களில் கூடியிருந்த மக்களைக் காய்ச்சியெடுத்தார்.



அவரது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மண்டை உடைந்து இரத்தம் வந்துகொண்டிருக்கிறது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டதற்கு என்னையை எதிர்த்துப் பேசுகிறீர்களா உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று கூறிவிட்டு தன்னை தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் அடித்துவிட்டதாக பொய்யான தகவலை மேலதிகாரிகளுக்கு கொடுத்து தன்னைக் காப்பாற்ற வருமாறு நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

செய்தியைக் கேட்டு AC மதன் நாயர் தலைமையில் மேலப்பாளையம் வந்த போலீஸ் படை எவ்வித விசாரணையும் தேவையும் இன்றி மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதிலும் அதன் புனிதத்தைக் கெடுத்து இழிவுபடுத்தும் விதமாக பூட்ஸ் கால்களோடு காட்டுமிராண்டித் தனமாக நுழைந்து பள்ளியில் தொழுகைக்காக வந்திருந்த பொதுமக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.



அங்கிருந்த நமது நிர்வாகிகள் சிலரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


செய்தியை கேட்டு கொதித்தெழுந்த முஸ்லிம்கள் இறையில்லம் இழிவுபடுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரவென்றும் பாராமல் பெண்களும் பள்ளிக்கு முன்னால் திரண்டனர்.

அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்ட எங்கள் மக்கள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்தோடு குழுமினர்.

எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத வரை இங்கிருந்து நகரமாட்டோம் என சூளுரைத்து நின்றனர்.

உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் இருக்கும் மக்களைப் பார்த்த காவல்துறையினருக்கு நமது கோரிக்கையை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவானது.

எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவல்துறை விடுதலை செய்தது.

மேலும் ஒருவாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உயரதிகாரிகள் வாக்குறுதியளித்தர்.

இதை இப்போது ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் கூறியதைப் போல ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் தாங்காத அளவிற்கு போராட்டம் வெடிக்கும் என்று ஜமாஅத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இறைவனின் ஆலயத்தை இழிவுபடுத்தியவர்
ளை எதிர்கொள்ள எந்த விலைகளையும் கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

அரசுக்கு பெரிய ஆபத்தில்லாத வகையில் இதுவரை நாங்கள் நடத்தி வந்த போராட்ட வழிமுறைகளையும் அல்லாஹ்வின் ஆலயத்திற்காக மாற்றியமைப்போம் என்று ஜமாஅத் அறிவித்துள்ளது.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக