சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் அதிமுகவை வீழ்த்திவிடலாம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்மாநில தலைவர் காதர்மொய்தீன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ராமநாதபுரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
ஜூன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்வேம்.
32 சதவீத வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ளது. 68 சதவீத வாக்குகளை பெற்ற கட்சிகள் தடம் தெரியாமல் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கள் டன் கணக்கிலும், செயல்பாடுகள் அவுன்ஸ் கணக்கிலும் உள்ளன.
இந்தியாவில் வளர்ச்சி வார்த்தையாக மட்டுமே உள்ளது. ஆக்கபூர்வமான திட்டங்கள் இல்லை. சிறுபான்மை இன மக்களை புறக்கணித்து விட்டு இந்தியா முன்னேற முடியாது.
ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவை அ.திமுகவை தனியாக எதிர்ப்பதைவிட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் அவர்களை வீழ்த்திவிடலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக