Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 ஜூன், 2015

கலீஃபா உமரின் ஆட்சியை முன்மாதிரியாய் கொள்வேன்! – அரவிந்த் கெஜ்ரிவால்


புது தில்லிகலீஃபா உமரின் ஆட்சி முறை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், மக்களின் மேம்பாட்டுக்காக அவரது ஆட்சி முறையை முன்மாதிரியாய் கொள்வேன் எனவும் புது தில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார்.

இஸ்லாமிக் இன்டர்நேஷனல் சென்டர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு “கலீஃபா உமரின் ஆட்சி” என்ற புத்தகத்தை மாணவி ஒருவர் பரிசளித்தார். புத்தகத்தை பெற்றுக்கொண்ட கேஜ்ரிவால், “கலீபா உமரின் ஆட்சி முறை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், மக்களின் மேம்பாட்டுக்காக அவரது ஆட்சி முறையை பின்பற்ற முனைவேன்” என்றும் தெரிவித்தார்.


இந்தியத் தலைவர்கள் கலீஃபா உமர் அவர்களை புகழ்வது முதல் முறையல்ல. தேசத் தந்தை காந்தியடிகள், ” உமர் போன்ற ஓர் தலைவர் இந்திய தேசத்திற்கு தேவை” என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக