Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 17 ஜூன், 2015

அரபு நாடுகளில் வியாழக்கிழமை ரமலான் முதல் நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அபுதாபி: அரபு அமீரகத்தின் “பிறை பார்க்கும் கமிட்டி” ஹிஜ்ரி 1436-ம் வருடத்தின் புனித ரமலான் நோன்பு வரும் ஜூன் 18-ம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமீரகத்தின் நீதி அமைச்சர் சுல்தான் பின் சயீத் அல் பாதி கூறியதாவது : நேற்று அபுதாபி சட்ட அமைச்சகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஷரியாவின் விதிமுறைகள் படியும் , அண்டை நாடுகளுடன் கலந்தாலோசித்ததின் பேரிலும் இன்று (ஜூன் 17) ஷாபான் மாதத்தின் கடைசி நாளாக கணக்கிடப்பட்டு நாளை 18.069.2015 அன்று ரமலான் மாதத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமைச்சர் அல் பாதி அமீரகத்தின் மேன்மைமிகு ஆட்சியாளர்களுக்கும் , அரபு நாடுகள் மற்றும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக