Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 ஜூன், 2015

சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: பாஜக எம்பி யோகி!


புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் வாரணாசியில் உள்ள கோவில் விழா ஒன்றில் கலந்து
கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கடலில் மூழ்கி சாக வேண்டும் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
“யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். சூரிய கடவுளுக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும். அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் வாழ வேண்டும். சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதில் பிரச்னை இல்லை என்றால் முஸ்லிம்கள் ஏன் சூரிய நமஸ்காரத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? சூரியனை ஒரு சமூக பிரச்னையாக ஆக்க முயற்சி செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் கழிக்க வேண்டும்” என்றார் யோகி ஆதித்யநாத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக