Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 ஜூன், 2015

நீதிபதி குன்ஹாவுக்கு பதவி உயர்வு !

கர்நாடக: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பொறுப்பேற்ற 11 மாதங்களில் தீர்ப்பு தேதியை அறிவித்தார். இறுதிவாதத்தை வேகமாக முடித்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். ஜெயலலிதாவுக்கு ரூ.100.1 கோடியும், சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு ரூ. 10.1 கோடியும் அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா தரப்புக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் க‌ர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 7 மாதங்களாக அங்கு சிறப்பாக செயல்பட்டு, கீழ் நீதிமன்றங்களில் நடைபெற்ற பல ஊழல்களை வெளியே கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று, குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு முக்கிய பொறுப்புகள் அடங்கியுள்ள பதவிக்கு குன்ஹா மாற்றப்பட்டதால், பதவி உயர்வு கிடைத்திருப்பதாக அவரது அலுவலக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக