Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

டிசம்பர் - 6 பாப்புலர் ஃப்ரண்ட்

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்!
1992 டிசம்பர் 6 அன்று தேசத்தின் வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் ஃபாசிச ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் சூழ்ச்சியினால் தகர்க்கப்பட்டு 23
ஆண்டுகள் கடந்த நிலையில், ஓய்வு பெற்ற உச்சமன்ற நிதிபதி லிப்ரகான் அவர்களின் தலைமையில் போடப்பட்ட கமிஷன் குற்றவாளிகளை பட்டியலிடப்பட்ட பின்பும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாமல் இன்று அதில் சிலர் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் இந்திய இறையாண்மையை காத்திடவும், நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலும் பாபர் மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும், இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி

பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பெரம்பலூர் வானொலி திடலில் 6.12.2015 அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் காஜா சரீப் தலைமை தாங்கினார்.ஆல் இந்தியா இமாம் கவுன்சீலின் மாநில செயலாளர் அர்சத் இமாம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக