திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள SNDP எனும் அமைப்பு நடத்தும் விழாவில் கேரள முதல்வர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகையை காரணம் காட்டி முதல்வர் உம்மன் சாண்டியை விழாவில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தெரிவிக்கையில், அந்த அமைப்பின்
பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் நீங்கள் கலந்து கொள்வதை பிரதமர் வட்டாரங்கள் விரும்பவில்லை, எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்க விதிமுறைகளின் (புரோட்டோகால்) படி பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தனக்கு ஒரு முதல்வராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரதமர் அலுவலகத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன் மற்றும் பிரனாயி விஜயன் ஆகியோரும் பிரதமர் அலுவலகத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக