டில்லியில் நடைபெற்ற ஜோதி சிங் (நிர்பயா) கற்பழிப்பு தற்பொழுது தேவதாசி முறையில் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு மறைமுகமாக உதவுகிறது. நிர்பயா வழக்கு மூலம் கடுமையாக்கபட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களினால் இந்த தேவதாசி முறையும் பாலியல் கொடுமை என்று தற்பொழுது வகைபடுத்தப்பட்டுள்ளது.
இன்றளவும் ஆந்திர மாநிலங்களில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறைப்படி ஒரு பெண் ஒரு கோயிலுக்காகவோ அல்லது ஒரு கடவுளுக்காகவோ அர்பணிக்கப்படுவாள். அவருடன் உறவு கொள்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் சாதாரன குடும்ப வாழ்வை வாழ அந்த பெண் அனுமதிக்கப்படுவது இல்லை.
பெண்களை பாலியல் அடிமைகளாக்கும் இந்த முறை தற்பொழுது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 370 மற்றும் 370A இன் கீழ் பாலியல் குற்றங்களாக கருத்தப்படும். இதன் மூலம் தேவதாசிகளாக பயன்படுத்தப்படுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக 7 வருடங்களில் இருந்து அந்த நபரின் இயற்கை ஆயுட்காலம் முடிவது வரை அவரின் குற்றசெயலுக்கு ஏற்ப சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது.
நிர்பயா மூலம் பல அப்பாவி பெண்கள் தங்கள் கற்பையும் வாழ்வையும் பெற்றதாகவே இதனை கருத முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக