Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 26 டிசம்பர், 2015

Facebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள் ...


Facebook Free Basics என்ற மாய வலையில் விழும் இணையதள போராளிகள்

சமீபகாலமாக ஃபேஸ்புக்கில் எதோ இணையதள சுதந்திரத்திற்கு குரல் கொடுங்கள், உங்களது நண்பர்களும் மக்களின் அடிப்படை இணையதள உரிமைக்காக குரல் கொடுத்திருகின்றனர் என்ற ஒரு செய்தி வளம் வருவதை பலரும் பார்த்திருப்போம். உணர்ச்சி வசத்தில் பலர் ஃபேஸ்புக்கின் இந்த ப்ரீ பேசிக்ஸ் என்கிற திட்டத்திற்கு ஆதரவாக TRAI க்கு மின்னஞ்சலும் அனுப்பிவிடுகின்றனர். ஆனால் அது அவர் எதற்க்காக தான் மின்னஞ்சல் அனுப்பிகிறேன் என்று நினைத்தார்களோ அந்த அடிப்படை நம்பிக்கைக்கே எதிரானது என்று அவர்களுக்கு தெரியாது.

ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் என்றால் என்ன? பல கோடி மக்களை கொண்ட இந்தியாவை தனது பொருட்களின் சந்தையாக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களம் இறங்குவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்பொழுது ஃபேஸ்புக்கும் கூகிளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. கூகிள் இந்திய சந்தைக்காக மட்டுமே கூகிள் ஒன் என்ற ஆண்டுராய்டு இயங்குதளத்தை(Operating System) அறிமுகம் செய்தது. இது பழைய கதை என்றாலும் இந்தியாவுக்கான கூகிளின் அடுத்த திட்டம் ப்ராஜெக்ட் லூன்(Project Loon). இந்த திட்டம் மூலம் வானத்தில் அதி உயர பலூன்கள் மூலம் சாதரணமாக இணையதள இணைப்புகளை கொடுக்க முடியாத இடங்களுக்கு இணையதள வசதியை கொடுத்து அந்த மக்களையும் இணைய உலகில் இணைப்பது என்பது தான். இதற்காக குறைந்தளவிலான (எவ்வளவு என்று தீர்மானிக்கப்படவில்லை) கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூகிள் அறிவித்திருந்தது.
கூகிளின் இந்த திட்டத்திற்கு ஒரு படி மேலே சென்று இணையதள இணைப்பு என்பது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமை என்று கூறி அதனை தங்கள் நிறுவனம் வழங்கப்போவதாகவும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஃபேஸ்புக் தனது பயனாளிகளுக்கு செய்தியை அனுப்பி வருகிறது. மேலோட்டமாக பார்க்கும்போது மிகவும் புரட்சிகரமான திட்டம் போலவும் ஃபேஸ்புக் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு போராடும் ஒரு நிறுவனம் போலவும் காட்சியளித்தாலும் இதனுள் புதைந்திருக்கும் ஆபத்து மிகவும் மோசமானது.
அந்த ஆபத்தை உணர #FreeBasics என்கிற ஹாஸ்டாக்கினை ஃபேஸ்புக்கில் அடித்தாலே தெரிந்துவிடும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. ஃபேஸ்புக்கின் இந்த ஆபத்து குறித்து பெரும்பாலும் எந்த தமிழ் செய்தி தளங்களிலும் பத்திரிகைகளிலும் காண முடியவில்லை. சென்றமாத புதிய விடியலில் “இணையதள நாட்டாமையாக மாறி வருகிறதா ஃபேஸ்புக்” என்கிற தலைப்பில் தற்பொழுது ஃபேஸ்புக் செய்து வரும் அடாவடித் தனங்களை குறித்து பதிவு செய்திருந்தோம். அதில் ஒரு பகுதியாக ஃபேஸ்புக்கின் internet.org என்ற திட்டத்தை பற்றியும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த internet.org என்பதைத்தான் ஃபேஸ்புக் Free Basics என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டுள்ளது.இந்த அடாவடித் தனங்களை எந்தவித தங்கு தடை இன்றி செய்ய ஃபேஸ்புக் தயார் செய்து கொண்டிருக்கும் ஆயுதம் தான் இந்த Free Basics.
இந்த Free Basics திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் இணையதளத்தை முழுமையாக இலவசமாக கொடுக்கப் போவதில்லை. தங்களுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களுடன் கூட்டு வைக்கும் நிறுவனங்களின் தளங்களை மட்டுமே ஃபேஸ்புக் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கும். ஃபேஸ்புக் நமக்கு இந்த சேவைகளை இலவசமாக வழங்குகிறது என்றால் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஒரு திட்டத்திற்கா அது இப்படி வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு திரட்டுகிறது? இந்த இணைய தளங்களை இலவசமாக பயனாளிகள் பார்க்க அந்தந்த தளங்களில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். அப்படியானால் வியாபார நிறுவனங்கள் தாங்களே கட்டணம் செலுத்தி தங்கள் தளங்களை பயனாளர்கள் இலவசமாக பார்க்க சம்மதிப்பார்களா? இங்கே தான் முழு கேள்விக்கான முடிச்சுகளும் அவிழ்கிறது.
ஃபேசஸ்புக்குடன் கூட்டு வைக்கும் அனைத்து நிறுவனகளின் தளங்களும் இலவசமாக வழங்கப்படும். மேலும் அந்தந்த நிறுவனங்களின் தளங்கள் மிக வேகமாகவும் பயனாளர்கள் பார்வையிட வசதியாகவும் வழங்கப்படும் இப்படி தங்களுடன் கூட்டு வைக்கும் நிறுவனங்களின் தளங்களை எளிதாக கிடைக்கச்செய்து மற்ற இணையதளங்களை பார்வையிடுவதை கடினமாக்கும். ஃபேஸ்புக்குடன் கூட்டு வைக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களில் Free Basics தவிர்த்து மற்ற இணையதள பாக்குகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உயர்த்தப்படும். ஆக பயனாளர்கள் அனைவரும் இதனையே பயன்படுத்த மறைமுகமாக தள்ளப்படுவார்கள். இந்த இடத்தில் உண்மையான இணையதள சுதந்திரம் உடைந்துவிடும். இதைத்தான் தற்பொழுது TRAI க்கு அனுப்பும் மின்னஞ்சல் மூலம் நாம் ஆதரித்து வருகிறோம்.
ஏற்கனவே Free Basics ர்கு ஆதரவு கொடுத்தவர்களில் நீங்கள் இருந்தால் மீண்டும் I support Facebook Free Basic என்பதற்கு பதில் I Do NOT Support Facebook Free Basics என்று மாற்றம் செய்து அதன் கீழே ஏனென்றால் இது இணையதள சுதந்திரத்திற்கு எதிரானது என்று பதிவிட்டு TRAI க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி advisorfea1@trai.gov.in
என்ன அனுப்ப வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு http://www.savetheinternet.in/ என்கிற தளம் உங்கள் வேலையை எளிதாக்கும் வண்ணம் அனைத்து பதில்களையும் பதிந்து வைத்துள்ளது. அதனை காப்பி செய்து மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இணையதள சுதந்திரத்தை பாதுகாத்திடுங்கள்.

நன்றி : puthiyavidial.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக