நேற்று மழையால்
இடிந்து விழுந்த வீட்டை நமது நிருபர்கள் நேரடியாக
சென்று இன்று ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டின் வயது முதிர்ந்த ஒரு அம்மா அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களிடம்
நமது நிருபர்கள் எப்படி இந்த கட்டிடம் சரிந்து விழுந்தது என கேட்டு அறிந்தனர். அப்போது
அவர்கள் கூறிய வார்த்தை நமது நிருபரையே கண்கலங்க வைத்தது.
நானும் எனது பேரனும்
இரவு வீட்டில் அதாவது வீட்டின் தெரு பக்கத்தில் உள்ள அறையில் (ரூமில்) தூங்கி கொண்டு
இருந்தோம். சரியா இரவு 2 மணியிருக்கும். ஒரு பெரும் சத்தம் கேட்டது. என்ன என்று அறையின்
கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மைய பகுதி அப்படியோ சரிந்து கீழே விழுந்து கிடந்தது.
இரவு 2 மணி என்பதால்
என்ன செய்வது என தெரியாமல் எனது பேரனை அழைத்து கொண்டு என் மகள் வீட்டில் போய் படுத்துக்கொண்டோன்.
அல்லாஹ்விற்குதான் நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோன்.
யாராவது உங்களை
வந்து பார்த்தார்களா என நமது நிருபர்கள் வினவ அதற்கு அந்த தாய் இப்பதான் பேரூராட்சியில்
இருந்து வந்து போட்டோ எடுத்து கொண்டு போனார்கள். வேர யாரும் வர வில்லை.
ஏன் ஜமாத்தார்கள்
யாரும் வந்து பார்க்க வில்லையா என வினவ அதற்கு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர்
தான் பதிலாக கிடைத்தது.
இன்ஷா அல்லாஹ்
கவலை கொள்ளாதீர் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் என நமது நிருபர்கள் அந்த தாய்க்கு
ஆருதல் கூறினார்கள்.
நேரடி கள தொகுப்பு
நமது நிருபர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக