மோடி வித்தையை காட்டி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி யுக்தி பா.ஜ.க. விற்கு அதன் பிறகு கை கொடுக்கவில்லை. மோடியின் மந்திரங்கள் மங்கத் தொடங்கின. அடுத்தடுத்து பெற்ற தேர்தல் தோல்விகளில் பா.ஜ.க தங்கள் நிலையை உணர்ந்துள்ளது.
வெற்றியின் போது மோடியினால் பெற்ற வெற்றி என்று கொண்டாடிய பா.ஜ.க. அடுத்தடுத்த தோல்விகளின்
போது இது மோடியின் தோல்வியல்ல என்று கூறுவதும் பா.ஜ.க வின் ஒரு பிரிவினரே இந்த தோல்விகளுக்கு மோடி பொறுப்பேற்க வண்டும் என்று கூறும் அளவிற்கு பா.ஜ.க வினுள் பிளவு ஏற்பட்டது.
இதன் விளைவு இனி வர இருக்கின்ற வங்காளம், தமிழ் நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் மோடியை முன்னிறுத்த போவதில்லை என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. நவம்பர் 8 ற்கு பிறகு பல இடங்களில் மோடியை பிரதானப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கூட பா.ஜ.க வினர் அகற்றியுள்ளனர்.
மோடியின் மாயாஜாலங்கள் எல்லாம் தீர்ந்து மக்கள் விழித்தெழும்போது மீள முடியாத பாதிப்பில் இருப்பார்கள் என்பதே நிதர்சனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக