தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி அவர்கள் நேற்று(17.12.2015) மணப்பாறையில் மரணமடைந்தார்கள்.தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியிருந்த மூட நம்பிக்கைகள், நூதனங்களுக்கு எதிரான சீர் திருத்த பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர்.பின்னர் சவூதி அரேபியாவின் மதீனாவில் உள்ள அல்ஜாமிஆ அல்இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பை
முடித்த இக்பால் மதனி அவர்கள் சவூதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் வளாகத்தில் அச்சிடப்பட்டு தமிழ் பேசும் மக்களிடம் விநியோகிக்கப்படும் திருக்குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பை சரிபார்த்தவர்.ஸஹீஹ் முஸ்லிம் என்ற பிரபல ஹதீஸ் நூலை முக்தஸிர் ஸஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் சுருக்கமாக தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமிய பிரச்சாரகராக பணியாற்றியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக