Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம் ...



பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கவுரவ செயலாளராக ஏ.ஹமிதா கலாம் நியமனம் செய்யப்பட்டுள்ளளார். இச்சங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இச்சங்கத்திற்கு அமைப்பாளராகவும், பதவி வழி பொருளாராகவும் இருப்பபார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நிதி உதவியுடன் முஸ்லீம் மகளிர் சங்கத்தின் சார்பில் செய்யப்படும் உதவிகள் ;

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வயதான முஸ்லீம் பெண்களுக்கு உதவிடும் வகையிலும், அவர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டவும், கதர் கைவினைப் பொருட்கள் மற்றுமு சிறுதொழில் செய்யவும், பயிற்கள், மாதந்தோறும் உதவித் தொகைககள், அரசு உதவும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரை கொண்டு ஆரம்ப விதைத் தொகையாக ஒரு லட்சம் வழங்கப் பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 2008-ம் ஆண்டு பதிவு செய்ய்ப்ட்டது. செயல்படாமல் போனது. பின்னர் தற்போது மீண்டும் இச்சங்கத்திற்கு மாற்றாக பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தில் உள்ளூர் முஸ்லீம் மக்களிடையே தலைசிறந்து விளங்கும் பெரம்பலூர் வட்டத்தில் ஹமிதா கலாம், முபாரக், ஜியாவுதீன், அஸ்ரப், ஹிதயத்துல்லா, அஹமதுல்லா, ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூரை சேர்ந்த பர்வீன் கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த பாவாஷா, மருதடியை சேர்ந்த அல்லாவுதீன், வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த ரசூல், ஹனிப், சம்சுதீன், வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சபீர், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த தாஹீர் பாசா, குன்னம் வட்டத்தில் லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த அப்துல் ரசீத், அப்துல் ஹாதி, இப்ராஹிம் ஆகிய நபர்களை கொண்டு புதிதாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் , கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக