சங்பரிவாரால் தூண்டப்படும் சமூக பயங்கரவாதத்துக்கு எதிரான பிரச்சார இயக்கம் துவக்க நிகழ்ச்சி
சங்பரிவாரத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிவிடப்படும் சமூக பயங்கரவாதம் மற்றும் தேசத்தில் வளர்ந்து வரும் சகிப்பின்யை எதிர்த்து, டிசம்பர் 10 முதல் டிசம்பர் 31 வரை தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது.
இந்தியாவில் நிலவும் எதார்த்தமற்ற சமூக அரசியல் நிலவரத்தை மக்களின் கவனத்துக்கு கொண்டு வரவும், அவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இந்த பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது.
‘காலால் நிமிர்ந்து நில்லுங்கள்; முழங்காலிட்டு பணிந்து போகாதீர்கள்!’ என்ற செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த பிரச்சார இயக்கத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பெங்களூர் டவுன் ஹாலில் டிசம்பர் 10-ந் தேதி நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதியாக டிசம்பர் 21-ந் தேதி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக