Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 11 மே, 2014

அஸ்மா (ரலி) : வீரமங்கையின் வீரவரலாறு!

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்களின் வீர வரலாற்றைப் பார்ப்போம்.

இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா (ரலி) அவர்கள் சிறு வயதில் இருந்து மார்க்கத்திற்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக அழைப்புப் பணியை மேற்கொண்ட காலத்தில் சுமார் 17 நபர்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
அந்தக் காலத்தில் 18 வது நபராக இஸ்லாத்தை ஏற்றவர் இந்த அஸ்மா (ரலி) அவர்கள். சிறு வயதில் அல்லாஹ்வின் தூதருக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் அழைப்புப் பணியில் ஏற்பட்ட கொடுமைகளைப் பார்த்து வளர்ந்ததால் இவரின் ஈமான் வலுப் பெற்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத்தின் பொழுது எதிரியின் திட்டத்திலிருந்து தப்ப தௌர் குகையில் தங்கினர். அப்பொழுது அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் பணியை அஸ்மா (ரலி) தான் செய்தார்கள்.
ஜுபைர் (ரலி) அவர்களை திருமணம் முடித்த பின் குடும்பத்தை வறுமையும் ஏழ்மையும் சூழ்ந்தது. அப்பொழுது அஸ்மா (ரலி) தளராமல் சரியான முறையில் குடும்பத்தை நடத்தினார். பின் வியாபாரத்தின் மூலம் குடும்பத்தில் செல்வம் வந்து சேர்ந்தது.
அஸ்மா(ரலி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜரத் செய்தபின் முதல் குழந்தை பிறந்தது. முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். அஸ்மா (ரலி) அவர்கள் போர்களிலும் கலந்து கொண்டுள்ளார்கள்.
அவர்கள் எப்பொழுதும் தலைக்கருகில் ஒரு பட்டாக்கத்தியை வைத்திருப்பார்கள். காரணம் அந்தக் காலத்தில் திருட்டு அதிகம்.
அஸ்மா (ரலி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் பெயரை கேட்டால் பணூ உமையாக்களின் தலைவர்கள் இரவு முழுவது தூங்க மாட்டார்கள். அவ்வளவு அச்சம் அவர்களுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மீது.
ஒருமுறை அப்துல்லாஹ் போருக்கு செல்ல அன்னையிடம் அனுமதி கேட்டார். அன்னையும் அனுமதி அளித்தார். பின் அந்தத் தாய் அஸ்மா (ரலி) அவர்கள் தன் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு கூறிய அறிவுரையைப் பார்த்தால் இப்படியும் ஒரு தாய் இருந்தார்களா என்று நினைக்க தொன்றுகிறது.
அஸ்மா (ரலி) அவர்கள், “என் அருமை மகனே! நீ சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய். ஆதலால் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்கு காரணமாக அமையும். அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு” என்று கூற, மகன் அப்துல்லாஹ் (ரலி) அன்னையைக் கட்டித் தழுவினார்.
அப்பொழுது அன்னை அஸ்மா (ரலி) அவர்கள் வயது முதிர்ச்சியால் பார்வை குன்றியிருந்தார்கள். மகனின் உடலில் கவசம் இருப்பதை உணர்ந்த அந்தத் தாய் இவ்வாறு கூறினார்கள்: “மகனே! யார் சத்தியதிற்காக உயிரை தியாகம் செய்ய துணிந்தாரோ அவர் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே நீ அதைக் கழற்றி விடு.”
பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவ்வாறே போரினில் கலந்து உயிர்த் தியாகம் அடைந்தார். இறந்த அப்துல்லாஹ்வை ஹஜ்ஜாஜ் கழுமரத்தில் கட்டி தொங்கவிட்டான். மறுநாள் அப்துல்லாஹ்வின் உடலை தேடி வந்தார் அந்த வீரத் தாய் அஸ்மா (ரலி).
கழுமரத்தில் கட்டி தொங்கவிட்டு இருக்கும் தன் மகனைப் பார்த்து சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? “இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையா?”
பின்பு மகனைக் கொன்ற ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபிடம் அந்த வீரத்தாய் கூறியது: ” நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய். ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டானே?”
நன்றி தூது ஆன்லைன்
ஆரூர் யூசுஃப்தீன்
Yousufdeen35@gmail.com

1 கருத்து: