Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 மே, 2014

முகத்திரை கிழித்த பன்முகத் தேர்தல் !!!


“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்” 
என்றொரு திருக்குறள் உண்டு. நமக்கு வரும் தீமைகளிலும்  ஒருவகை நன்மை உண்டு, அத் தீமை நாம் நெருக்கமாய் எண்ணும் மனிதர்களின் இயல்புகளை வெட்ட வெளிச்சமாக்கும் என்பது அதன் கருத்து. அத்தகைய சூழலை ஏற்படுத்தியது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.
ஆரியம் தழைக்கா தமிழகம்:

தமிழகத்திற்கோர் பெருமை உண்டு. ஆரியம் பேசி அடிமைப்படுத்த முனைந்தோர் யாருக்கும் இப்பூமி இடம் கொடுத்ததில்லை. அதை நன்குணர்ந்த அரசியல்வாதிகள் ஆரிய எதிர்ப்பை தங்கள் காரியங்களில் முதன்மையாக்கி  கொண்டார்கள். வஞ்சகம் அறியாத தமிழினம் அவர்களின் நஞ்சினை அறிந்திருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
வள்ளுவன் வாக்கு :
தமிழை நீட்டி முழங்கிய வைகோவையும், சமூக நீதிக்கு சால்வை போர்த்திய ராமதாசையும், தேசப்பற்றின் மொத்த உருவமாய் நடித்துக் காட்டிய விஜயகாந்தையும்,  மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைவர்கள் என்றுதான் சமூகம் நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் “ரொட்டித் துண்டுக்கு ஓடும் நன்றியுள்ள ஜீவன்தான் தாங்கள்”  என்பதை அவர்கள் தமிழக மக்களுக்கு “நச்”சென உணர்த்திய தேர்தல் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். வள்ளுவன் வாக்கு இங்கே நிதர்சனம் ஆனது. 
மூழ்கும் கப்பல்:
இரத்த ஆற்றில் மூழ்கி கொண்டிருக்கும் “பாஜக” எனும் கப்பலில் ஏறி கரை சேரலாம் என்ற கனவுதான்,    “பாஜக + மதிமுக + பாமக + தேமுதிக + கககக…??? ” எனும் முரண்பட்ட கொள்கை கூட்டணிக்கு வித்திட்டது. ஆனால் மூழ்கும் கப்பல் கரை சேராது என்பதை, வாக்குகளால் சவுக்கடி கொடுத்து விளங்க வைத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
கூட்டணி பலூன் :
தமிழகத்தின்  39 தொகுதிகளில், போட்டியிடாமலேயே தோல்வியுற்ற நீலகிரியையும் சேர்த்து, மொத்தம்  37 தொகுதிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது பாஜக மெகா கூட்டணி.  ஊடகங்கள் ஊதிக்காட்டிய பலூன், தேர்தல் முடிவெனும் குண்டூசியால் வெடித்து சிதறியிருக்கிறது.
சொந்த செலவில் சூனியம்:
அரசியல் முகவரி அழிந்து கொண்டிருந்த அரைவேக்காடு கட்சிகள், இத்தேர்தல் மூலமாக, தாங்களே தங்கள் முகவரியை தடம் தெரியாமல் தகர்த்துள்ளனர். தன் குடும்ப நலனும், தற்காலிக பதவி ஆசையும், எதிர்கால அரசியலுக்கு வேட்டு வைத்துள்ளது.
இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு சிறுபான்மையின ஆதரவை அடியோடு இழந்து, அரசியல் அனாதையாய் நிற்கின்றன “பசுத்தோல் போர்த்திய கரடிகள்”
முகத்திரை கிழித்த பன்முகத் தேர்தல் !!
பெயரளவில் பல கட்சி முறை ஜனநாயகம் என்றாலும், மறைமுகமாய் இருகட்சி ஆட்சி முறை தேர்தலையே   தமிழகம் சந்தித்து வந்தது. தமிழக கட்சிகள் தங்களின் இருள் முகத்தை திராவிடத்தினுள் புதைத்துக் கொள்ள அது வழி வகுத்தது. இந்த பன்முகத் தேர்தல், கனவுகளால் அமைந்த காவிக் கூட்டணியின் முகத்திரையை கோரமாய் கிழித்துள்ளது எனும்போது மகிழ்ச்சியே மேலிடுகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக