பெரம்பலூர் மாவட்டத்தில் 17.05.2012 முதல் வருவாயத்துறையினரால் வழங்கப்படும் சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றுகள் மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்றுகளை பெரம்பலூர், குரும்பலூர், குன்னம், லப்பைக்குடிக்காடு, கீழப்புலியூர், வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், செட்டிகுளம் மற்றும் கூத்துர்ர் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் மற்றும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் பொதுமக்கள் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
2013-14 ம் கல்வியாண்டில் 80325 சான்றுகள் மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு, பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி இறுதித்தேர்வு எழுதி மேற்படிப்பு படிக்க செல்லவிருக்கின்ற மாணவ மாணவியர்கள் மின்ஆளுமைத்திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது மேற்படிப்பிற்கு தேவையான சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றுகளை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலங்களில் முன்னரே விண்ணப்பித்து பெற்று பயன் அடையுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக