அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் நேற்று நமதூரில் இரவு நேரத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. அதற்கு முன் கிட்ட தட்ட அஸர் மஃக்ரிப் நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது. இந்த காற்று வீசும் போது நமக்கு
அல்லாஹ் தன் திருமறையில் கூறிய அந்த வசனம் தான் நினைவுற்கு வருகின்றது.
“ அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்சொய்தியாக அனுப்பி வைக்கின்றான். (மனிதர்களே) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கின்றோம். ” அல்குர்ஆன் 25 : 48
பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இறுந்தன. இதனால் மக்களில் நடமாட்டம் அதிகமாக இல்லை. இரவில் இறங்கிய மழையால் ஓர் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டன. இந்த நிகழ்வும் நமக்கு அல்லாஹ் அத்தாட்சி என்பதை நமது நிருபர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
“அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது." அல்குர்ஆன் 16 : 65
இந்த இரண்டு புகைப்படம் பகல் நேரத்தில் எடுத்தது
நமது நிருபர்
மாஷா அல்லாஹ்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு