லப்பைகுடிகாட்டில் கழிவு நீர் வடிகால் வசதி செய்துதரகோரி பேரூராட்சி அலுவலகத்தை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள லப்பைகுடிகாடு பேரூராட்சியின்11 மற்றும் 13 வது வார்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதிகள் ஏதும் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று மதியம் ஆவேசம் அடைந்த இப்பகுதியினர் கவுன்சிலர் பதுருன்னிஷா, மற்றும் நூருல்ஹீதா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலர் சோமசுந்தரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி தினகரன்
புகைப்படம் நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக