சமூகம் அல்லது ஓர் நிறுவனத்தின் நன் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள்தான் சட்டம் எனப்படும். மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைபடுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடனும், நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்டம் வழிவகை செய்கிறது.
சமூகத்தால் செய்ய இயலாததை சட்டம் செய்திட இயலும். சட்டம் பயின்றோர் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். நீதிக்கு குரல் கொடுக்க முனையும் சட்டத்துறையில் பொருளாதார வாய்ப்புகளும் நிரம்பவே இருக்கின்றன. சிறிய நிறுவனங்கள் முதல் கார்பொரேட் நிறுவனங்கள் வரை சட்ட ஆலோசகர், சட்ட மேலாளர் என பல பணி வாய்ப்பினை பெற முடியும். “தகுதியுள்ளோர்” பட்டம் பெற்றவுடன் வேலை என்ற ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது. வாதத்திறமையுடன், புத்திக்கூர்மையும், சிந்தனைத் தெளிவும் வாய்க்கப்பெற்றோர் சிறந்து விளங்க ஏற்றத்துறை.
ஐந்தாண்டு மற்றும் மூன்று ஆண்டு இளநிலைக் கல்வி :
இந்திய அளவில் சட்ட இளநிலைக் கல்வி LL.B (Bachelor of Law) மற்றும் முதுநிலைக் கல்வி LL.M (Master of Law) பட்டப்படிப்புகளாக அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டக்கல்வியானது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த B.A., B.L. (after +2) மற்றும் மூன்று ஆண்டு B.L. (after UG Degree) இளநிலை பட்டப்படிப்பாக அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்படிப்புகள், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளி மூலமும், (சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் செயல்படும்) அரசு சட்டக் கல்லூரிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டு M.L. (Master of Law) முதுநிலை படிப்பு:
இரண்டு ஆண்டு M.L. (Master of Law) முதுநிலை படிப்பு, வணிக சட்டம், அரசமைப்பு சட்டம் , மனித உரிமை, சொத்துரிமை சட்டம், சர்வேதச விதிகள், சுற்றுச் சூழல் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகிய துறைகளில் அளிக்கப்படுகிறது.
மேலும் பல்கலைக்கழகத்தின் மாலை நேர கல்லூ¡¢களில் வணிக சட்டம், சொத்துரிமை சட்டம், சுற்றுச் சூழல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பாடங்களில் ஓராண்டு PG Diploma பட்ட மேற்படிப்பு அளிக்கப்படுகிறது.
(நன்றி : நாமும் சாதிக்கலாம், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வெளியீடு)
புதிதாக 5 படிப்புகள் :
முதுநிலை டிப்ளமோ படிப்பில் சட்ட நூலகர் படிப்பு, நுகர்வோர் சட்டம் மற்றும் பாதுகாப்பு, சைபர் ஃபாரன்சிக் மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி, கிரிமினல் சட்டம், கிரிமினாலஜி மற்றும் ஃபாரன்சிக் சயின்ஸ், மருத்துவ சட்டம் தொடர்பான படிப்புகள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இடங்கள் மற்றும் முக்கிய தேதிகள்
5 ஆண்டு சட்டப் படிப்புகள் (பி.எல். (ஹானர்ஸ்) :
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு பி.ஏ., பி.எல். (ஹானர்ஸ்-120 இடங்கள்), பி.காம்., பி.எல். (ஹானர்ஸ்-60 இடங்கள்) உள்ளிட்ட படிப்புகளுக்கு மே 12-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6 ஆகும். ஜூன் 13-ஆம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும்.
5 ஆண்டு சட்டப் படிப்புகள் (பி.ஏ., பி.எல்) :
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் 1,052 பி.ஏ., பி.எல். இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
ஜூன் 13-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.
3 ஆண்டு சட்டப் படிப்புகள் (பி.எல். (ஹானர்ஸ்) :
சீர்மிகு சட்டப் பள்ளியில் உள்ள 3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்புக்கு மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இந்தப் படிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 11 ஆகும். இந்தப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்படும்
3 ஆண்டு சட்டப் படிப்புகள் (பி.ஏ., பி.எல்):
அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு மொத்தம் 1,262 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (“ரேங்க் லிஸ்ட்’) ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.
2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புகள் (எம்.எல்):
பல்கலைக்கழகத்தில் வர்த்தக சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் எம்.எல். படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 8 ஆகும். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.
முதுநிலை டிப்ளமோ படிப்புகள் :
அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட 11 வகையான முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் மே 26 முதல் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்?
அரசுச் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளுக்கு அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திலும், சீர்மிகு சட்டப் பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகளுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு வலைதளம்: www.tndalu.ac.in
http://www.tndalu.ac.in/pdf/admission1415/ADMISSIONNOTIFICATION14-15.pdf
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக