Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 12 மே, 2014

நமதூர் பசங்க முதல் பரிசுங்க ....

வி.களத்தூரில் இன்று (11.05.2014) தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப் (அணி ) சார்பாக வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டி காலை 9 மணிக்கு ஐடியல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை தலைவர் லியாக்கத் அலி அவர்கள் துவக்கிவைத்தார்

இறுதி போட்டிக்கு லெப்பைக்குடிக்காடு எம்.ஆர்.எப் (MRF) aniyum,வி.களத்தூர் DVC “A” அணியும் மோதின.இப்போட்டி மாலை 5.30 மணி வரை நீடித்து இறுதியாக லெப்பைக்குடிக்காடு எம்.ஆர்.எப் (MRF) அணி வெற்றி வாகை சூடி முதல் பரிசை தட்டி சென்றது.

முதல் பரிசு ரூபாய் 3003 :
முதல் பரிசை லெப்பைக்குடிக்காடு எம்.ஆர்.எப் (MRF) தட்டி சென்றது.இப்பரிசை MMM ஜெனரல் கான்ட்ரcடிங்க் & மெயின்டனஸ் உரிமையாளரின் மகன் வழங்கினார்.
இரண்டாம் பரிசு ரூபாய் 2002:
இரண்டாம் பரிசை வி.களத்தூர் DVC “A” அணி தட்டி சென்றது. இப்பரிசை ஸ்டார் பேமிலி ரெஸ்டாரன்ட் சார்பாக அன்சர் அலி வழங்கினார்.
மூன்றாம் பரிசு ரூபாய் 1001:
மூன்றாம் பரிசை வி.களத்தூர் DVC “B” அணி தட்டி சென்றது.இப்பரிசை சித்திக் பெய்ண்டிங் உரிமையாளர் சித்திக் பாஷா அவர்கள் வழங்கினார்.

நன்றி விகளத்தூர்.காம்

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள் MRF டீம்
    இரு சகோதரர்களுக்குள் (LBK & V.Kalathur) நடந்த இறுதிப் போட்டி,
    யார் வென்றாலும், இருவருமே வெற்றி பெற்றார்கள்.

    பதிலளிநீக்கு