திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் மேற்கு ஜாமியா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் ஆரோக்கிய இதயத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம். இன்ஷா அல்லாஹ் வருகின்ற
31.05.2014 சனிக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை நடைபெறுகின்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியம். உங்கள் அருகாமையில் உள்ள மருந்து கடைகளில் முன்பதிவு நடைபெறுகின்றன. மேற்கே உள்ளவர்கள் ஷெரின் மெடிக்கல் மற்றும் S.S.B மெடிக்கலிலும் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் ஷபி மெடிக்கல் மற்றும் அலி மெடிக்கலிலும் முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். மேலும் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குபவர் Dr. A. காதர் சாஹிப் MD.,DNB.,MRCPI (UK) அவர்கள். இதில் நமதூர் மக்கள் கலந்து கொண்டு பயன் அடையுங்கள்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக