I.I.T (Indian Institute of
Technology)
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்..... ]
CBSE என்ற கல்வி நிறுவனத்தால் வருடந்தோரும் நடத்தப்படும்
நுழைவுத்தேர்வு தான் JEE (Joint Entrance Examination), இதில் பங்கு
பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் முலம்
இந்தியாவில் உள்ள தலை சிறந்த பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படித்து உங்கள் பிள்ளைகள் இந்திய அளவில் சிறந்த பொறியாளர் (Engineer) ஆகலாம். (இன்ஷாஅல்லாஹ்).
நமது
பிள்ளைகளும் நமது அருகாமையில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர், வெளிநாட்டில் நல்ல வேளையில் உள்ளனர், பிறகு எதற்கு இந்த JEE நுழைவு
தேர்வு என்று கேள்வி எழலாம்,அப்படி என்ன சிறந்த கல்லூரி என்ற
கேள்வியும் எழலாம்.எங்க படித்தாலும் Engineer Engineer தான், இந்தியாவில் உள்ள முதன்மை
வாய்ந்த கல்லூரிகளில் படிப்பதால் மட்டும் என்ன
சிறப்பு கிடைக்க போகின்றது, என்பதை
பார்போம்.
இந்திய
அளவில் உள்ள சிறந்த
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் உள்ளவை.
1.
I.I.T (Indian Institute of Technology)
2. N.I.T (National Institute
of Technology)
3. I.I.I.T. D&M (Indian
Institute of Information Technology Design and Manufacturing)
4. Anna University
இவையாவும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப் படுகின்றன.
IIT (Indian Institute of Technology)
1 .I.I.T என்பது மத்திய
அரசால் நடத்தப்படுகின்ற இந்தியாவின்
மிகப்பெரிய பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி.
2. மாணவர்களை மதிப்பெண்களுக்கு பின்னல்
மட்டும் ஓட வைக்காமல் ஒரு சிறந்த பொறியாளர்(Engineer) - ஆக
உருவாக்குகிறார்கள்.
3.மாணவர்களின்
திறமையை அதிகப்படுத்த சிறந்த LAB – வசதி
4. No
fees. Very negligible amounts only.
இது
இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் சென்னையில் உள்ளது.
இங்கு
படிப்பதால் கிடைக்கும் பலன்கள்.
1. நம் சமுதயதிற்க்கு அதிகமான
பலன்கள் உண்டு.
2 .IAS /IPS - நுழைவு தேர்வுகளில் சுலபமாக
தேர்ச்சி பெறலாம்.
3. ISRO/NASA போன்ற ஆராய்ச்சி கூடங்களில்
வேலை வாய்ப்பு.
4. அரசு உயர்
பதவிகளில் வேலை வாய்ப்பு.
5. வேலை
வாய்ப்புகளில் முன்னுரிமை.
6. படிக்கும்
போதோ அல்லது படிப்பை முடித்தவுடன் உலக அளவில் உள்ள
மிகப் பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை. (தொடக்க சம்பளம்
இந்தியாவிலேயே லட்சத்திற்கு மேலே இருக்கும்)
,
JEE Main தேர்வுக்கான
தகுதிகள் (Eligibility)
1. 12ஆம் வகுப்பில் Physics, Mathematics கண்டிப்பாக
படித்து இருக்க வேண்டும். மற்றும் (Chemistry, Bio-technology, Computer Science, Biology) இதில் எதாவது ஒன்றை படித்து இருக்க வேண்டும். அல்லது 3 வருடம் Diploma முடித்திருக்க
வேண்டும்
2. மதிப்பெண் 50% அதிகமாக இருக்க வேண்டும்.
3. 10 வகுப்பு மற்றும் 12 வகுப்புகளில் முதல் தடவையில்
தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
I.I.T - யில் சேர்வதற்கு JEE Main மற்றும் JEE Advanced ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி
பெறவேண்டும்.மற்ற கல்லூரிகளுக்கு JEE Main தேர்ச்சி பெற்றாலே போதுமானது.
ஐஐடி கல்வி நிலையங்களில் படிப்பதற்காக நடத்தப்பட்ட ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு
தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 14வது இடத்தில்
உள்ளது. மேலும் ஐஐடியில் சேர தமிழகத்திலிருந்து 2.5 சதவீதம் பேரே தேர்ச்சி
பெற்றுள்ளனர். 2014-15ம்
கல்வியாண்டில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதல்நிலை நுழைவுத்
தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடை
பெற்றது. இந்திய அளவில் 13 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள்
பங்கேற்ற இத்தேர்வின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிப்பட்டது. அதில் ஒரு
லட்சத்து 50 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்ச்சி
பெற்ற மாணவர்களில் தமிழக மாணவர்கள் மிகவும் குறைவு என்பது கவலை தருவதாக
அமைந்துள்ளது. ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு...1/9 ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு...
என்ஐடி, ஐஐடி மற்றும்
மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும்
நுழைவுத் தேர்வு தான் ஜெ.இ.இ. மொத்தம் 360
மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இரண்டு வகைத் தேர்வுகள்...
ஜே.இ.இ. தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இதில்
முதலில் முதல்நிலைத் தேர்வும் (மெயின்) பின்னர் முதன்மைத் தேர்வும் (அட்வான்ஸ்)
நடத்தப்படும்.
4வது இடத்தில்
தமிழகம்...
மொத்தம் பாஸானவர்களில் 2.5
சதவீதம் தான் தமிழகத்தை சேர்ந்தவர்களாம். இதனால், தேர்ச்சி விகித பட்டியலில் தமிழகம் 14வது இடத்தில்
உள்ளது.
ஆந்திரா முதலிடத்தில்...
மொத்தம் 21,818 மாணவர்கள்
தேர்வாகி இந்தப் பட்டியலில் ஆந்திரா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்தில்...
அதற்கு அடுத்த இடத்தில் 19,409
மாணவர்களோடு உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும்,
ராஜஸ்தான் மூன்றாவது
16,867 மாணவர்களோடு ராஜஸ்தான்
மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
குஜராத்தில்... அதற்கடுத்ததாக மகாராஷ்டிராவில் 13,626 மாணவர்கள் தேர்ச்சி
அடைந்துள்ளனர். பீகாரில் 10,987
பேரும், குஜராத்தில் 10,037 பேரும்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பீகாரை விட மோசமான இடத்தில் தமிழகம்...
தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதாவது மிகவும் பின் தங்கிய பீகார் கூட நமக்கு மேலே நல்ல இடத்தில் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
பாடத்திட்டம் தான் காரணம்... குறைவான மாணவர்களே இத்தேர்வில் வென்றதற்கு நமது
பாடத்திட்டமே என குற்றம் சாட்டுகின்றனர் இத்தேர்விற்கு பயிற்சி அளிக்கும்
ஆசிரியர்கள்.
மின்னஞ்சல் மூலமாக
AGM பாஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக