அரசியல் என்றால் என்ன??
“அப்பா, அரசியல்னா என்னாப்பா?” பையன் கேட்டான்.
தகப்பன் யோசித்தான். மகனுக்கு எளிதில் புரியும்படி விளக்க நினைத்தவன் இப்படிச் சொன்னான்:
“நம்ம குடும்பத்தை எடுத்துக்குவோம். இப்ப நான் இருக்கேன், நான்தான் நம்ம குடும்பத்துக்கு வருமானம் கொண்டுவர்றவன். என்னை முதலாளித்துவம்னு வைச்சுக்குவோம். அம்மா இருக்காங்க, நம்மளையெல்லாம் கவனிக்க வேண்டியவங்க.
அவங்கதான் அரசாங்கம். நீதான் பொதுமக்கள். குட்டிப்பாப்பாதான் நாட்டோட எதிர்காலம். பாப்பாவைக் கவனிச்சுக்கிடுறதுக்கு வேலைக்கார ஆன்ட்டி வர்றாங்கள்ல, அவங்கதான் தொழிலாளி வர்க்கம். ஓகேயா? நான் சொன்னதை வைச்சுக்கிட்டு யோசிச்சுப்பாரு. உனக்கே அரசியல்னா என்னான்னு புரியும்.”
பையன் யோசித்தபடி படுக்கப்போனான். நீண்ட நேரம் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. நடு இரவில் திடீரென பாப்பா வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. இவன் போய்ப் பார்த்தான். பாப்பாவைச்சுற்றி சிறுநீரும் மலமுமாய் இருந்தது. சற்றுத் தள்ளி அம்மா குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பதையும் பார்த்தான். வேலைக்காரப் பெண் இருக்கும் இடத்திற்குப் போனான், அந்த அறையின் கதவு மூடியிருந்தது. உள்ளே வெளிச்சம் இருந்ததால், கதவின் சாவித்துளை வழியாக எட்டிப்பார்த்தான். உள்ளே இவனுடைய அப்பா வேலைக்காரம்மாவைக் கட்டிப்போட்டு வன்புணர்ச்சி செய்துகொண்டிருந்தான். தலையை ஆட்டிக்கொண்டே தன் இடத்திற்குத் திரும்பிவந்தான்.
மறுநாள் காலையில் தகப்பனிடம் வந்தான் மகன். “அப்பா, அரசியல்னா என்னன்னு புரிஞ்சுபோச்சு.”
“அப்படியா? எங்கே சொல்லு பார்க்கலாம்.”
“முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தைக் கட்டிப்போட்டு கஷ்டப்படுத்திக்கிட்டிருக்கு. அரசாங்கம் தூங்கிக்கிட்டிருக்கு. நாட்டோட எதிர்காலம் நாத்தத்துல கிடக்கு. பொதுமக்களைக் கவனிக்க யாருமே இல்லை...” இதானே அரசியல்..
நன்றி முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக