வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்
இந்திய சுதந்திர வரலாற்றை திப்பு சுல்தானை தவிர்த்து யாராலும் எழுதமுடியாது. அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும் , ஆண்மிக உலமாக்களும், சமுதாய சிற்பிகளும், செல்வந்தர்களும், பெண்களும் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று காவிகள் தான் போராடி பெற்றோம் என்று கூறிவருகின்றனர். அவர்கள் திப்புவின் வரலாற்றை கற்பனை கதை என்றூம் கூறுகின்றனர். அப்படி என்ன அவர்களுக்கு திப்புவின் மீது அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி. அப்படி பட்ட திப்புவை பற்றி நாம் அறிந்தது என்ன? பல அறிவியல் அறிஞர்களை பற்றியும், விளையாட்டு வீரர்களையும் பற்றி தெரிந்து வைத்திருகின்றோம் ஆனால் இந்த நாட்டின் விடுதலைக்காக தன் செல்வம்,ஆட்சி, குடும்பம், உயிரை இழந்த திப்புவின் வரலாற்றை படிக்க முயற்சி கூட செய்யவில்லை. உங்கள் பார்வைக்கு இதோ திப்புவின் வரலாறு.
ஆங்கிலேயர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தனியாக ஹைதர் அலி போராடிய காலம் அப்பொழுது எந்த மன்னர்களும் முன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட வராத நிலை. ஹைதர் அலி மரணத்தை தழுவினார். ஆங்கிலேயர்கள் மிகவும் நிம்மதியடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை காரணம் வீரர் திப்பு சுல்தான் தந்தை விட்டு சென்ற பணியை அவர் கையில் எடுத்தார். ஆங்கிலேயர்களை இந்த மண்ணில் விட்டு விரட்டாமல் ஓயமாட்டேன் என்று தீவிரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார் திப்பு.
200 ஆண்டுகள் ஆடாய் வாழ்வதை விட 2 நாள் புலியாய் வாழ்வதே மேல் என்று சூழுரைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்க திராணி இல்லாத பல பகுதியை ஆண்ட மன்னர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தனர். ஆனால் திப்பு அந்த தேச துரோக செயலை செய்யவில்லை தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார். திப்புவின் போராட்டத்தை கண்ட ஆங்கிலேயர்கள் திப்புவை வீழ்த்த பல சதி திட்டங்களை தீட்டினர். ஜெனரல் ஜேன்ஸ் ஸ்விவரட் என்ற ஆங்கிலேயர் கவர்னர் திப்புவை வீழ்த்தி எலிசபத் மகராணியிடம் பதக்கத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் திப்புவை நோக்கி படையை அனுப்பினான் படைகள் அனைத்தும் பாதி வழியில் திப்புவினால் வீழ்த்தப்பட்டது.
அடுத்ததாக பதவிக்கு வந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மாத்யூஸ் புதிய திட்டத்தை தீட்டினான். திப்புவை வீழ்த்த வெளியாட்கள் மூலம் முடியாது. திப்புவை வீழ்த்த அவர்களுள் பல கருப்பு ஆடுகளை கொண்டு தான் முடியும் என்று முடிவு எடுத்தனர். அதனை செயல்படுத்த தொடங்கினர். பெத்னூர் நகரத்தை கைப்பற்றினர். பின் அனந்த்பூர் கைப்பற்ற எண்ணினர் அங்கிலேயர்கள். அனந்த்பூர் கோட்டை சுற்றிவளைத்தனர் திப்புவின் படைகள். கோட்டை மீட்கப்பட்டது. மிகவும் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் பல சிறிய பெரிய பகுதியை ஆண்ட ஆங்கிலேயரின் அடிமை மன்னர்களை அழைத்து ஓர் சதி திட்டத்தை தீட்டினர். அந்த திட்டம் தான் திப்புவின் ஆளுநர்களை விலைபேசினர்.
திப்பு 1783ல் ஓர் ஆணையை இயற்றினார் அவற்றில் சில :
எதிரிகளிடம் போர்புரியும் போது அவர்களிடம் இருந்து எதையும் அபகரிக்கக்கூடாது.
சிறைவாசிகளை துன்புறுத்தக்கூடாது. அப்பாவி மக்களை துன்புறுத்தக்கூடாது.
பெண்கள் மீது மரியாதை காட்டவேண்டும். அவர்கள் மீது சுண்டு விரல் கூட படக்கூடாது.
கோவில்கள், மஸ்ஜித், சர்ச் போன்ற தளங்களையும் சேதப்படுத்தக்கூடாது.
ஆங்கிலேயர்களை விரட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் மைசூர் திளைத்தது. அந்த நேரம் திடீரென காரன்வார்ஸ் பெரும்ப்படையினை கொண்டு வந்தான். பிறகு பெங்களூர் ஆங்கிலேயர் கைவசம் சென்றது.பிறகு ரிச்சர்ட் வெல்லஸ்லி என்ற கவர்னர் திப்புவை கொல்ல பிரிட்டன் இதுவரை திரட்டாத பெரும் படையை திரட்டி திப்புவின் கோட்டையை நோக்கி சென்றான். திப்புவின் கவாளி முதல் தளபதி வரை அனைவரையும் விலைபேசி தன் பக்கம் இழுத்துக் கொண்டான் ரிச்சர்ட்..
மே 4 1799 ஆம் நாள் திப்புவின் ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை ஒடைக்கப்பட்டது. திப்புவின் ஆணைக்கு கட்டுப்பட அங்கு யாரும் இல்லை. திப்புசுல்தான் ஒரு நிமிடம் எதிரியை உற்று நோக்கினார். அடுத்த வினாடி எதிரிபடைகளுக்குள் அல்லாஹ் பெயர் பத்தித்த வாளைச்சுழற்றியபடி நுழைந்தார். அதில் வீரமரணத்தை சுவைத்தார் திப்பு. அவரின் உடலில் மொத்தம் 3 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. துப்பாக்கி குண்டு அவரின் முகத்தில் பாய்ந்து இருந்தது, திப்புவின் கண்கள் மரணித்த பின்னும் திறந்து தான் இருந்தது. திப்பு இறந்த பின் உடலில் பட்டாடை, தலைப்பாகை, ஆபரணங்கள் ஏதும் இல்லை. ஆடைக்குள் ஓர் குர் ஆன் மட்டும் இருந்தது........
"இந்திய திருநாட்டின் உண்மையான திருமக்கள்,
அதிக உரிமை கொண்டவர்கள் இஸ்லாமியர்கள் தான்.
அவர்கள் தான் நாட்டின் விடுதலையில் பெரும் பங்கு வகித்தனர். "
-அறிஞர் டாக்டர் ஜேம்ஸ்
தகவல் முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக