துபையில் இலவச வாகன பரிசோதனை முகாம் இன்று முதல், அதாவது 25.05.2014 முதல் 05.06.2014 வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.
துபையில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இப்பரிசோதனை முகாமில் டயர், ஏசி, பிரேக், பேட்டரி உள்ளிட்டவை முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த டெக்னீஷியன்கள் மூலம் உரிய ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பரிசோதனை முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 050 269 53 53 எனும் அலைபேசி எண்ணில் முன் பதிவு செய்து தங்களது வருகையினை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமீரகத்தில் கோடைக்காலத்தில் நடைபெறும் வாகன விபத்துகள் அதிக அளவில் டயர்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக நடைபெறுவதால் பிரத்யேக இம்முகாமிற்கு அப்கிரேட் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக