அணைத்து இஸ்லாமிய இயக்க வெறியர்களுக்கும் !!
அஸ்ஸலாமு அலைக்கும்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெற்றதை அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கும் அணைத்து இஸ்லாமிய இயக்கத்தினருக்கும் இந்த மடல் ஒரு நல்ல சிந்தனையை தூண்டும் என நம்புகிறேன். (இன்ஷா அல்லாஹ்)
முஸ்லிம்களுடைய நலன், பாதுகாப்பைப் பற்றி (அது ஏதிராகவோ, ஆதரவாகவோ) பேசாத தேர்தல் மேடை பிரச்சாரமோ, தொலைக்காட்சி சேனல்களோ இல்லை என்றே கூறலாம். இன்னும் சொல்வதென்றால் இந்த நாடாளுமன்ற தேர்தல் முஸ்லிம்களுடைய பாதுகாப்பை கருதியே நடைப்பெற்ற தேர்தல் என்று கூறும் அளவிற்கு அது இருந்தது. அதற்கு முக்கிய காரணம் நரபலி புகழ் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தது தான்.
பாஜகவிற்கு 30 % மக்களே ஆதரவு தந்துள்ளனர் என்றால் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் செய்த ஊழலுக்கு எதிர்ப்பும், வர்த்தக ஊடகத்தின் மோடிக்கு ஆதரவு பொய் பிரச்சாரமும் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களுடைய எதிர்ப்பு அலை அவர்களுக்கு ஆதரவு அலையாக மாறியது என்றே கூறலாம்.
இதுபோன்று தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கூட்டணியில் திமுக செய்த பிரமாண்ட ஊழலும், குடும்ப ஆட்சி முறையும் காரணமாக கூறலாம்.
வெற்றி தோல்வி இறைவன் புறத்திலிருந்தே வருகிறது இறைநம்பிக்கையாளன் இப்படித்தான் நம்ப வேண்டும் என்று நாம் ஆறுதல் அடைந்து கொண்டு இருப்பினும். தேர்தலுக்கு முன் நாம் எப்படி நடந்து கொண்டோம் என்பதை சற்று நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
மார்க்க புகழ் இயக்கமோ 40 லட்சம் ஓட்டு எங்கள் கையில் உள்ளது நாங்கள் திமுவிற்கு ஆதரவு என்று மாறியவுடன் அதிமுகவின் வெற்றி ஒரு கேள்வி குறியே! இதை ஆங்கில பத்திரிக்கை நாளிதலே கூறிவிட்டது என்று கூட்டத்தையும், ஓட்டையும் கணித்து வைத்து பெருமை அடித்து கொண்டது. ஆம்புலன்ஸ் புகழ் இயக்கமோ வெற்றி பெறுவதற்கு முன்பாகவே வேட்பாளர் பெயருக்கு பின் எம்.பி பதவியை போட்டு எங்கள் குரல் ஒலிக்காமல் நாடாளுமன்றம் இயங்காது என்று பெருமை அடித்து கொண்டு இருந்தது. விடுதலைக்கு பெயர் போன இயக்கமோ மார்க்கத்திற்கு முரணான காரியமாக இருந்தாலும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று தவறை நியாயப்படுத்திக் கொண்டு இருந்தது. மூத்த முத்துன கட்சியோ திமுகவிற்கு ஓட்டு போடுவது தான் முஸ்லிம்களுடைய கடமை என்று புதிதாக ஆறாவது கடமையை நமக்கு அறிவித்தது.
இப்படி அணைத்து இயக்கங்களும் படைத்தவனை மறந்து மார்கத்திற்கு முரணாக பேச்சாலும், செயலினாலும் பெருமை அடித்துக் கொண்டு இருந்ததை நாம் பார்க்க முடிந்தது.
இந்த தேர்தலில் நிறைய பிரச்சனைகளை இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்குளேயே நடத்தி சாதனை படைத்தார்கள். மூன்று இயக்கங்களும் முக்கோண முனையில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி இறுதியில் பொறுப்பாளர் வீடு காவல்துறை வரை சென்று முடிந்தது.
(இந்த தேர்தலில் டைடானிக் ஹீரோ பெயரில் உள்ள இயக்கமும், இன்சைடு தமிழகத்தில் மட்டுமே இருந்தாலும் இந்திய பெயர் வைத்துள்ள இயக்கமும் விமர்சிக்கும் அளவிற்கு அரசியல் சண்டையில் ஈடுபடவில்லை, தப்பித்து விட்டார்கள்.)
இதில் என்னவென்றால் அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் பாஜக வெற்றி பெறக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தும் மோடி வெற்றிப் பெற்றதின் மூலம் இறைவன் நமக்கு பெரும் படிப்பினையை தந்துள்ளான். அதிலும் குறிப்பாக ஏகத்துவத்தில் வளர்ச்சி அடைந்த தமிழக முஸ்லிம்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அணைத்து இயக்கங்களுடைய நோக்கமும் மதவாத பாஜகவை எதிர்ப்பதாக இருந்தாலும் தங்களுக்குள் அடித்துகொண்டு எதிர்த்தார்கள். அனைவரும் ஓரணியில், ஒருமித்த குரலில் நின்று எதிர்க்கவில்லை.
அன்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை எடுத்து சொல்வதற்கு இயக்கம் அவசியம் இல்லையென்றாலும் இன்றைய காலத்தில் அரசாங்கத்திற்கு கோரிக்கையோ, மேடை பிரச்சாரமோ செய்வதற்கு இயக்கம் என்று ஒன்று அவசியமானதாக இருக்கிறது. சமுதாய நலனுக்காக இயக்கங்கள் தொடங்கப்பட்டாலும். அந்த சமுதயத்தை காரணம் காட்டியே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சமுதாய பிரிவினைக்கு இயக்கங்களே வழிவகுக்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்று.
குர்ஆன், ஹதீஸ் மட்டுமே நமக்கு ஒற்றுமையும், இம்மை-மறுமை வெற்றியும் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை அழகிய முறையில் எடுத்து சொல்லி நமக்குள் சரி செய்து கொள்வது நம் கடமை.ஆகவே மார்க்க விசத்தில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சமுதாய பிரச்சனையிலும், இஸ்லாமியர்கள் என்ற ஒரே கண்ணோட்டத்தில் நம்மை எதிர்ப்பவர்களையும் நாம் ஓர் அணியில் நின்று எதிர்க்க வேண்டும். இது தான் தேர்தலில் நாம் பெரும் படிப்பினை.
வரும் காலங்களில் அப்படி நடந்து கொள்ளுமா இந்த இயக்கங்கள்?? இல்லை வருங்கின்ற சட்டமன்ற தேர்தலில் இதைவிட இன்னும் வீரியமாக சண்டையிட்டு அடித்துக்கொள்ள போகின்றதா?? வெறியா, வெற்றியா ?? அணைத்து கொள்கின்றதா? அடித்துக் கொள்கின்றதா?? என்பதை பொருத்து இருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்....
தங்களுடைய இமேஜ் போய்விடும் என்பதற்காக சமுதாய பிரச்சனையில் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று எந்த அமைப்பும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். தொண்டர்களாகிய நீங்கள் தான் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
சரியென்று நினைத்தால் பிறருக்கு ஷேர் செய்யவும். முடிந்தால் உங்கள் தலைமைக்கும் அனுப்பி வைக்கவும்.
இறுதியாக இடஒதிக்கீடு மேட்டர் என்னாச்சு??? எல்லோரும் வாய் மூடிக் கொண்டு இருக்காங்களே !!
முகநூலிருந்து
---ஆழியூர் ஜமால்
அஸ்லாமு அலைக்கும்(வரஹ்)
பதிலளிநீக்குஎன் இனிய இஸ்லாமிய சோந்தங்கலே ஒரு கை அசைத்தால் ஓசை எலும்பாது இரு கை அசைந்தாதன் ஓசை கிடைக்கும்.நம் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சோ்வதா்க்கு துவா செய்யுங்கள்......
இடஒதுக்கீடு! பல கோடிகளை சிலவழித்து கேடிகள் நடத்திய நாடகம்.
பதிலளிநீக்கு