நமதூர் கிழக்கு பழைய பள்ளிவாசலுக்கு ஓர் சிறப்பு வரலாறு உண்டு. ஆனால் அந்த வரலாற்றிற்கு சொந்த காரர்களாகிய பெரும்பாலானவர்கள் இப்போது நம்மிடத்தில் இல்லை. ( இறைவனின் நாட்டம்)
இந்த பள்ளி தொழுகைக்கு இடம் பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் தொழுகைக்கு போது மான வசதிகள் இல்லை. அதனால் இந்த பள்ளியை இடித்து விட்டு புதியதாக ஒரு பள்ளியை இங்கு கட்ட வேண்டும் என அப்போதைய கண்ணியத்திற்குறிய ஜமாத்தார்கள் ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் ஒரு சில நம்முன்னோர்கள் அன்று கூறிய அந்த வார்த்தைகள்தான் எங்களை போன்றவர்களுக்கு பசுமரத்து ஆணி போல் அந்த வார்த்தை பதிந்தது. ஆம் ! அது தான் இந்த வார்த்தை. இந்த பள்ளியை இடிப்பதாக இருந்தால் எங்களுடைய ஜனாஜாவின் மீது ஏறிதான் இந்த பள்ளியை இடிக்க வேண்டும் என கூறினார்கள்.
ஆனால் இன்று இப்பள்ளி ஒரு சில மாற்றங்களுடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியாகவும் நம் அத்தாக்களுக்கு வசதியாகவும் இருப்பது சந்தோசமாக உள்ளது. ஆனால் பள்ளிவாசல் உள்பகுதியில் உள்ள கழிவரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தண்ணீர் அதிகமாக கீழே வேஸ்ட்டாக செல்கின்றன.
இதை நிர்வாகம் உரிய முறையில் சரி செய்ய வேண்டும் என நமதூர் மக்கள் சார்பாக வேண்டுகேள் வைக்கின்றோம். ஏனெனில் இந்த பள்ளிவாசலுக்கு அதிகமாக வயதானவர்கள் தான் தொழுகைக்கு வருகின்றார்கள். இந்த தண்ணீரால் இந்த வயதானவர்கள் வலுக்கி கீழே விழாமல் இருப்பதற்கு உரிய முறையில் சரி செய்வார்களா ?
நமது நிருபர்
Reflection of the Truth
பதிலளிநீக்கு