Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 மே, 2014

ததஜ வின் புதிய பரிமாணங்கள்...


ஒரு இயக்கம் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது, கடந்த கால நிகழ்வுகளுக்கிடையில் தாங்கள் கவனிக்க மறந்து அப்படியே விட்டுவிட்ட பல தவறுகளை தார்மீகமான அடிப்படையில் கலந்தாலோசித்து தங்களிடம் இருந்த நன் மதிப்பு சிதிலமடைவதற்கு காரணமான காரணிகளை அலசி ஆராய்ந்து நல்ல முடிவுக்கு வந்திருக்கிறது..

நான்கைந்து முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது, எந்த ஒரு முடிவும் ஒன்றைவிட ஒன்று முக்கியமானதாகவே படுகிறது.

ாதாரண மனிதர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மார்க்கத்தை கற்றுக்கொள்ள எண்ணுபவர்கள் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் என அனைவரும் வழிப்போக்கர்களே... ஆனால் மார்க்க பிரச்சாரம் செய்பவர்களும் இயக்கமும் சாதாரண நடைமுறை ஒழுங்குகளை விட மிகவும் கண்ணியமிக்க மார்க்கம் சார்ந்த ஒழுக்க முறைகளை பின்பற்றுபவர்களாக இருத்தல்வேண்டும் . அப்படி இருந்தால்தான் எதிரே நின்று கேள்வி கேட்பவர்களும், பிரச்சாரத்தை செவி மடுப்பவர்களும் எந்த நிலையிலும் தடுமாறாமல், பிரச்சாரகரைப்பற்றிய நன்மதிப்போடு இருப்பர். அப்போதுதான் பிரச்சாரத்தின் நியாய அநியாயங்களை அலசும் நிலைக்கு மனது செல்லும்...

இல்லையென்றால் நாஞ்சில் சம்பத் கூட்டம் போல் ஆகிவிடும்...

மிகத்தெழிவாக ஒழுங்கு நடவடிக்கைகளை அறிவித்துள்ள தமிழ்நாடு தெளஹீது ஜமாஅத்தின் நிபந்தனைகள் பாராட்டுக்குரியது, மட்டுமல்ல, அதனை பார்த்த அனைவருக்கும்கூட அது அழகியமுறையில் கடைபிடிக்கவேண்டியாதும் கூட...

முகநூல் விவாதங்களில் நான் உட்பட அரசியல் சார்ந்த நிலைபாட்டை மிக மோசமாக விமர்சித்திருக்கிறோமே தவிர இதுவரை மார்க்கம் சார்ந்த விஷயங்களில் அவர்களை விமர்சிக்கச்சென்றதில்லை, அதற்கான தேவையுமில்லை...

ஒரு மூன்றாண்டுக்கு முந்தைய தமிழ்நாடு தெளஹீது ஜமாஅத்தை பாற்கப்போகிறோம்...

இஸ்லாம் ஓர் இனிய மார்கம்...

இஸ்லாம் ஓர் எழிய மார்கம்...

இஸ்லாமிய பிரச்சாரகர்களும் இனிமையானவர்களாகவும் எழிமையானவர்களாகவும் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்....

முகநூலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக