பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2 ஆயிரம் பேருக்கு பெரம்பலூரில் உள்ள கியாஸ் ஏஜென்சி மூலம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
லப்பைக்குடிகாடு பகுதியில் நேற்று முன்தினம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, சட்ட விரோதமாகவும், முன் அனுமதி பெறாமல் மீராமைதீன், பாட்சா, ஜாகீர், ஜாகங்கீர், அப்துல்ரகீம், பாபு, சம்சுதீன், சலீம், கக்கீம்பாட்சா, தமிம்அன்சாரி, அப்துல்கனி, யூனிக்ஸ், முஜிபுர்ரகுமான், சித்திக், தாரிக் மற்றும் கிராம பெண்கள் உள்பட சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாக பென்னகோணம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் புகார் செய்தார்.
புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேன்யூவல் 15–க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பென்னகோணம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் , Not for some body(15 Persons) , Whole Labbaikudikadu People , let them arrest all .... if they(15 People) affected , we need to rise and prove our unity.... inshaa allah ..
பதிலளிநீக்கு