புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1987-ம் ஆண்டு மே மாதம் உத்தரப் பிரதேசம் மீரட் அருகேயுள்ள ஹசிம்புராவில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தடுக்க அங்கு குவிக்கப் பட்ட ரிசர்வ் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட 42 முஸ்லிம்களை சுட்டுப் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பலரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 16 காவல்துறையினருக்கும் எதிராக உறுதியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே அவர்களை விடுதலை செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக