பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணகுமார் முகாமை தொடங்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி முகாமை பார்வையிட்டார்.
வட்டார மருத்துவ அலுவலர் சேசு தலைமையில் டாக்டர்கள் கலைமணி, ராஜசேகர், சின்ராசு, மணிவண்ணன், ஆயிஷாபேகம், சுகந்தி, நளினி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் 214 கர்ப்பிணிகளும், 137 குழந்தைகளும் பயன் அடைந்தனர். இதில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் சிறப்பு சிகிச்சைக்காக 47 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் 15 புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு தகவல் படிவங்கள் வழங்கப்பட்டன.
நன்றி LBK Updating
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக