நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு வசதியாக, மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி மே 8-ம் தேதி வரை நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடரை நேற்றுடன் முடித்து வைத்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை மாநிலங்களவை கூடுதல் செயலர் டி.பி.சிங் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் நீடிக்கிறது.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் வரும் ஐந்தாம் தேதியுடன் காலாவதியாவதால், மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு ஏதுவாக, மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மசோதாவிற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக