Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 மார்ச், 2015

தந்திடிவி விவாதமும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளும் - தாவுத் அலி

தந்திடிவி விவாதமும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளும்
ஆரம்ப காலத்தில் எல்லாம் ஒரு டிவி இண்டர்யூ என்றால் அவர்கள் யாரை நேர்காணல் செய்கிறார்களோ அவர்கள் மனம்கோனாமல் கேள்வியை கேட்பார்கள்
இப்போது காலம் மாறிவிட்டது இவரை எப்படி மடக்கலாம் என்கிர பானியில்தான் கேள்வியை கேட்கிறார்கள் அதிலும் தந்தி டிவியில் நேர்காணல் செய்தவர் ஒரு முடிவு செய்து வந்தவர்போல கேள்விகளை கேட்டார்

ஒரு சமுதாயத்தின் தலைவர் என்று அறிமுகம் செய்துகொள்பவர் ஒரு சமுதாயம் சார்பாக சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எந்த பிரிப்பேரும் இல்லாமல் அங்கு போய் அமர்ந்தது ஆச்சரியமாக இருந்தது
பிறமதத்தவர்கள் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மார்க்கத்தை விட்டுகொடுத்தது மன்னிக்கமுடியாதது
பிறக்கும்போது அனைவரும் முஸ்லிமாகதான் பிறக்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கிரது
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னதை ஒவைசி அவர்கள் சொல்கிறார்கள் அதுவும் முஸ்லிம்களை தாய்மதமான இந்து மதத்திற்கு மாற்ற போகிறோம் என் ஆர் எஸ் எஸ் சார்பாக சொல்லப்பட்டதிற்க்கு பதிலாக சொல்லப்பட்டது
இதை ஒரு குற்றம்போல அந்த அந்த நிருபர் கேட்கும்போது இதுதான் உண்மை இதை நம்புவதால்தான் நான் முஸ்லிம் இதை நம்பாவிட்டால் நான் முஸ்லிமாக இருக்க இயலாது என தெளிவாக சொல்ல ஜவாகிருல்லாவுக்கு ஏன் தயக்கம்?
இதே கேள்வியை புதியதலைமுறை டிவியில் சகோதரர் பிஜெவிடம் கேட்டபோது கொஞ்சமும் தயக்கமில்லாமல் இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னதுதான் இதுதான் உண்மை என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொன்னாரே!!
ஆனால் ஜாவாகிருல்லா அவர்கள் அது விளம்பரத்திற்காக சொல்லப்பட்டது என்கிறார் அதில் எங்களுக்கு உடன்பாடுகிடையாது என்பதுபோல ஏன் புலம்புகிறார்? ஒவைசி சொன்னதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லும் இந்த வார்த்தை பொய்யாகிவிடுமா? நமக்கு ஒன்றும் புரியவில்லை
இஸ்லாத்தில் பெண்கள் அடிமைபடுத்த படுகிறார்கள் என்று முஸ்லிம் பெண்மணிகளே சொல்லிவிட்டார்கள் அதிலும் அவர்கள் சாதாரன பெண்மணிகள் அல்ல சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்று நிருபர் சொல்லும்போது
ஜவகிருல்லாஹ் அவர்களும் அந்த பெண்மணிகள் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் என்று அவர்களின் பெருமைபேசுகிறார் இதற்க்கு மாற்று கருத்தும் இருக்கிறது என் மிக சாதரணமாக முடிக்கிறார்
இஸ்லாம் பெண்கள் விசயத்தில் என்ன சொல்கிரது? பெண்கள் அடிமைகளாகவா இருக்கிறார்கள்? மற்ற மத பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? அடிமை என்றால் என்ன? சுதந்திரம் என்றால் என்ன? இதையல்லாம் சொல்ல தெறியவில்லையா? அல்லது சொன்னால் இந்துக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என பயப்படுகிறாரா?
இதே போல வீரமணி பற்றிய செய்தியாகட்டும் சுப்பிரமணியசுவாமி பற்றிய செய்தியாகட்டும் சொல்லவந்ததை பளிச்சென சொல்ல தெரியாமல் சிரித்துவழிந்து சரனாகதியாகிறார்
இந்துமுன்னனி ராமகோபாலன் அவர்கள் டிவி முன்பு பட்ட கேவலத்தை பார்த்து சந்தோஷப்பட்ட நமக்கு சில நாட்களில். இப்படி ஒரு இண்டர்யூ வருத்தத்தை தருகிறது
ஒரு பேராசிரியர் ஒரு அமைப்பு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் என் பலபரினாமங்களை வைத்துள்ள ஒருவர் இந்த கேட்டகரியில்தான் இருக்கிறார் என்பது முஸ்லிம்கள் வருத்தப்படவேண்டிய விஷயம்தான்
அல்லாஹ்தான் அனைவருக்கும் நல்வழிகாட்ட வேண்டும் நாமும் துவா செய்வோம்.
செய்தி முகநூலிலிருந்து

6 கருத்துகள்:

  1. சகோதரர் தாவுத் அலி அவர்களின் கருத்து ஆரோக்கியபூர்வமற்றது.
    இன்றைய வெகுஜன மீடியாக்கள் இஸ்லாத்திற்கெதிரான ஆர்வம் கொண்டவையாக இருக்கும்போது தந்தி டிவியும் விதிவிலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தந்தி டிவியின் நிகழ்ச்சியின் பின்புலத்தையும், இன்றைய சமூக சூழலையும் கருத்தில் கொண்டு நாம் குறைகளையோ/விமர்சனங்களையோ வெளியிட வேண்டும் சகோ.

    நான் அந்த நிகழ்ச்சியை பார்த்த வகையில். பேராசியர் மிகவும் சிறத்தையுடனும், அவருடைய பார்வையின் அடிப்படையில் பதில் தந்தார்.

    அவருடைய பார்வையில்/பதிலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். அதே சமயம் இது போன்று குறைகளை பரப்புவதை முஸ்லிம் சகோதரர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பேராசியர் போன்று பொது தளத்தில் இயங்குபவர்களுக்கு நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். சமூகம் விமர்சிக்குமோ என்கின்ற நெருக்கடி அடுத்தடுத்த பணிகளை சிறப்பாக முன்னெடுக்க அவர்களுக்கு தடையாக இருக்கும்.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா பேராசியருக்கு அருள்பாலிப்பானாக!
    அவர்களிடத்திலே இன்னும் சிறப்பான துடிப்பான பங்களிபுக்களை இந்த சமூகத்திற்கு வழங்குவானாக!

    குறிப்பு: ஏன் இது போன்ற ஆரோக்கியமற்ற பதிவை இந்த தளத்தின் ஆசிரியர் பதிவு செய்தார் என்று தெரியவில்லை. தாங்கள் நிகழ்ச்சியை பார்த்து பதிவு செய்தீர்களா என்று தெரியவில்லை. தயவுசெய்து பதிவுகள் விசயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  2. சகோதரர் தாவுத் அலி அவர்களின் கருத்து ஆரோக்கியபூர்வமற்றது.
    இன்றைய வெகுஜன மீடியாக்கள் இஸ்லாத்திற்கெதிரான ஆர்வம் கொண்டவையாக இருக்கும்போது தந்தி டிவியும் விதிவிலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தந்தி டிவியின் நிகழ்ச்சியின் பின்புலத்தையும், இன்றைய சமூக சூழலையும் கருத்தில் கொண்டு நாம் குறைகளையோ/விமர்சனங்களையோ வெளியிட வேண்டும் சகோ.

    நான் அந்த நிகழ்ச்சியை பார்த்த வகையில். பேராசியர் மிகவும் சிறத்தையுடனும், அவருடைய பார்வையின் அடிப்படையில் பதில் தந்தார்.

    அவருடைய பார்வையில்/பதிலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். அதே சமயம் இது போன்று குறைகளை பரப்புவதை முஸ்லிம் சகோதரர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பேராசியர் போன்று பொது தளத்தில் இயங்குபவர்களுக்கு நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். சமூகம் விமர்சிக்குமோ என்கின்ற நெருக்கடி அடுத்தடுத்த பணிகளை சிறப்பாக முன்னெடுக்க அவர்களுக்கு தடையாக இருக்கும்.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா பேராசியருக்கு அருள்பாலிப்பானாக!
    அவர்களிடத்திலே இன்னும் சிறப்பான துடிப்பான பங்களிபுக்களை இந்த சமூகத்திற்கு வழங்குவானாக!

    குறிப்பு: ஏன் இது போன்ற ஆரோக்கியமற்ற பதிவை இந்த தளத்தின் ஆசிரியர் பதிவு செய்தார் என்று தெரியவில்லை. தாங்கள் நிகழ்ச்சியை பார்த்து பதிவு செய்தீர்களா என்று தெரியவில்லை. தயவுசெய்து பதிவுகள் விசயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இஸ்லாத்திற்கு எதிராக அவர் சொல்லி இருந்தால் அது தவறுதான் (பொது வாழ்க்கைக்கு எதிராக இஸ்லாம் இருந்தால் பொதுவாழ்க்கையை விடவேண்டுமே தவிர இஸ்லாமை அல்ல)

    பதிலளிநீக்கு
  4. வ அலைக்கும் வஸ்ஸலாம்,
    சகோதரரின் கருத்துக்கு நன்றி!

    யாருமே இஸ்லாத்திற்கு எதிராக பணிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.

    ஒவ்வொருவருக்கும் ஓர் பார்வை/கருத்து உண்டு.

    எப்படி உங்கள் பார்வை ஓர் விஷயத்தை தவறு என்று சொல்கின்றதோ
    அதேபோன்று உரிமை பேராசியருக்கும் உண்டு.

    நான் இங்கே என்ன குறிப்பிட வேண்டும் என்று ஆசைப்படுக்கின்றேன் எனில்,

    இதுபோன்று ஒருவருக்கொருவர் செய்யும் பணிகளில் குறைகளையும், எதிர்மறையாய் பார்ப்பதையும்தான் ஆரோக்கியமற்றது என்கின்றேன். இப்போது இருக்கும் சூழலில் நாம் செய்ய வேண்டிய பணிகள், செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கின்றது. ஆதலால் ஆக்கபூர்வமான பணிகளில், இஸ்லாமிய லட்சியங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். இப்னு கைய்யும்ம் (ரஹ்) என்று நினைக்கின்றேன். அவர்கள் குறிப்பிடும்போது, ”முஸ்லிம் சமூகம் தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை, சட்டதிட்டங்களை கவனம் செலுத்த ஆரம்பித்தால், இஸ்லாத்திற்கு வெளியே இருந்து சவால்களை கவனம் செலுத்த இயலாமல் ஆகிவிடும்”

    இது எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் நேர் வழியில் நிலைத்திறுக்கச் செய்வானாக!

    பதிலளிநீக்கு
  5. 1>எப்படி உங்கள் பார்வை ஓர் விஷயத்தை தவறு என்று சொல்கின்றதோ
    அதேபோன்று உரிமை பேராசியருக்கும் உண்டு.


    >>ஒருவருடைய பார்வைக்கு உருவவழிபாடு சரி என்று படுகிறது அப்படி என்றால் இவருடைய பார்வை சரி என்று சொல்லமுடியுமா ?

    2>இதுபோன்று ஒருவருக்கொருவர் செய்யும் பணிகளில் குறைகளையும், எதிர்மறையாய் பார்ப்பதையும்தான் ஆரோக்கியமற்றது என்கின்றேன். இப்போது இருக்கும் சூழலில் நாம் செய்ய வேண்டிய பணிகள், செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கின்றது. ஆதலால் ஆக்கபூர்வமான பணிகளில், இஸ்லாமிய லட்சியங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    >> அந்த நேர்காணலில் பேசியது தவறு என்று சொல்லி இருந்தால் இந்த வாதமே தேவை அற்றது இதை சொல்ல ஏன் தயங்குகிறார் ஜவாஹிருல்லா ?

    3>இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். இப்னு கைய்யும்ம் (ரஹ்) என்று நினைக்கின்றேன். அவர்கள் குறிப்பிடும்போது, ”முஸ்லிம் சமூகம் தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை, சட்டதிட்டங்களை கவனம் செலுத்த ஆரம்பித்தால், இஸ்லாத்திற்கு வெளியே இருந்து சவால்களை கவனம் செலுத்த இயலாமல் ஆகிவிடும்”

    >>தயவு செய்து இந்த விசியத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  6. ஓகே சகோதரா,
    தங்கள் கருத்துக்கு நன்றி.
    வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு