குன்னத்தை அடுத்த திருமாந்துறை ஏரிக்கரை வரத்து வாய்க்கால் பகுதியில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி தன்னுடைய வயலுக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அவருடைய டிராக்டரின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் அவர் கீழே இறங்கிய போது அப்பகுதியில் சுமார் 7
அடி நீள மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதை கிராமத்தில் உள்ளவர்களிடம் பழனிச்சாமி தெரிவித்தார். இது பற்றி அறிந்த மாவட்ட வன அலுவலர் ஏழுமலை உத்தரவின் பேரில் வனச்சரகர் ரவீந்திரன், வன காப்பாளர் திருநாவுக்கரசு, வனவர் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக கோரையாறு வனப்பகுதியில் சென்று விட்டனர். குன்னம் பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக