Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 27 மார்ச், 2015

மானகேடான செயல்களுக்கு வழி வகுக்கும் மது அதற்கு அடிமையான இளைஞர்கள் ..!!


மானகேடான செயல்களுக்கு வழி வகுக்கும் மது 

அதற்கு அடிமையான இளைஞர்கள் ..!! 



அல்லாஹ் சுபஹான தால மறுமை நாளில் அந்த மஹ்சர் என்னும் மைதானத்தில் (சுட்டெரிக்கும் வெயிலில்) வாழிப வயதில் அல்லாஹ்வை அதிகம் வணங்கி ஊறி திளைக்கும் ஒவ்ஓவுறு இளைஞனுக்கும் தன்னுடைய அர்ஷின் நிழல் தற இருக்கிறான் ஆனால் இந்த சமுதாயம் அல்லாஹ்வை மறந்து மறுமை நாளை மறந்து மதுவுக்கு அடிமை ஆகி கிடக்கிறது இந்த இளைஞர் சமுதாயம்...!! (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிற) 


நேர்வழி நடப்போம் :- ✅

இன்று முதல் நியத்து எடுங்கள் சகோதர்களே எந்த ஒரு சகோதரன் மது அருந்த கண்டாலும் தடுத்து நிறுத்துங்கள் அவரிடம் தாவத் கொடுக்க முயற்சி எடுங்கள். அல்லாஹ் சுபஹானதால தீமையை தடுக்க சொல்கிறான்...!! 
சரி மது நம் மார்கத்திற்கு எந்த அளவுக்கு தடுக்க பட்டது..? 

2:219 يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” 

மது அருந்துதல் சைத்தானின் அருவருக்கதக்க செயல் ஆகும்

5:90 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

5:91 إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

இன்று மதுவால் எந்த அளவுக்கு பிரச்சனைகளை நாம் காண்கிறோம் பாவத்தையும் சம்பாரித்து சகோதரத்துவத்தையும் இழந்து நமக்கு நாமே மோசம் செய்து கொண்டவர்களாக நிற்கிறோம் (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிற) 

மது அருந்துபவர் சபிக்க பட்டவர் ..!! யாரால் சபிக்க பட்டவர் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சபித்தவர்கள் இந்த மது அருந்துபவர்கள் அருந்துபவர் மட்டும் அல்ல அதை வாங்குபவர் விற்பவர் அதை சுமந்து செல்பவர் இப்படி அனைவரையும் சபித்தார்கள் 

அல்லாஹ்வுடைய சாபத்துக்கும் ரசூலுடைய சாபத்துக்கும் நாம் சவால் விடும் நிலைமையில் இன்று மதுவில் முழ்கி வருகிறோம் (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிற) 


1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மது அருந்துபவனின் நிலை :- 

மது அருந்தி போதை அடைந்தவனின் நிலை நாற்ப்பது நாள் தொழுகை ஏற்று கொள்ள படாது அவன் அவ்வாறே இறந்து விட்டால் நரகில் நுழைவான் பாவமாணிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான் (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) 
நூல் : இப்னுமாஜா

இன்று மது அருந்துபவர்கள் நினைக்கிறார்கள் நாளை தவ்பா செய்து கொள்ளலாம் என்று இன்றே நீங்கள் இறந்துவிட்டால் உங்களுடைய நிலை என்ன ..? அல்லாஹ் இடத்தில் நீங்கள் சொல்ல போகும் பதில் என்ன என்று சிந்தித்து பாருங்கள். 

இன்னும் சிலர் எனக்கு கஷ்டம் நான் அதை இழந்து விட்டேன் இதை இழந்து விட்டேன் நிம்மதி இல்லை என்று சொல்கிறார்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் நம் சஹாபாக்கள் இழந்ததை விடையா நாம் அதிகம் இழந்து விட்டோம் .. 

மது தடை செய்யப்பட்டது என்று அறிவுப்பு செய்த அடுத்த நிமிடமே மதுபானகளை ரோடில் போட்டு உடைத்தார்கள் சஹாபாக்கள். அன்று மதினாவே மது ஆறாக ஓடியதம். 

இன்று அல்லாஹ்காக நாம் எதை இழக்க தயாராக இருக்கிறோம் ..? 

உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது என்றே வைத்து கொள்வோம் அது உங்களுக்கு ஒரு சோதனை அல்லவா கண்டிப்பாக நீங்கள் அது அல்லாஹ் இடத்தில இருந்து தான் வந்தது என்று அவிண்டம் அல்லவா பாதுகாப்பு தேடுவீர்களா இல்லை மது பானதிடம் பாதுகாப்பு தேடுவீர்களா ..? 

2:155 وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

தண்டனை கொடுத்தார்கள் அல்லாஹ் உடைய தூதர் :- 

பாடம் : 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5 
6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள். 
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நாம் யாருக்கும் சாட்டை அடிகள் வழங்கு வதில்லை தவறுகளும் பெறுகி கொண்டே போகின்றன. 

இன்ஷா அல்லாஹ் ..!! நன்மையை ஏவி தீமையை தடுப்போம் தேவை படும் போது கையால் தடுப்போம் ..!! 

உங்களுக்கு தெரிந்தவர் தெரியாதவர் இப்படி யார் மது அறிந்தினாலும் உடனே அவரிடம் சென்று மது தடுக்க பட்டது என்றும் அது எந்த அளவுக்கு அல்லாஹ் இடத்தில் இருந்து உங்களை தொலைவாக்கி விடும் என்பதையும் எத்தி வையுங்கள். 

அல்லாஹ் ஆலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக