குஜராத்: குஜராத்தின் அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை
472 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை இந்த பணியில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அத்துடன் 2013-14 நிதி ஆண்டில் இந்த பணியை செய்து வரும் நிறுவனம் 23 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் குஜராத் அரசாங்கம் அறிவித்துள்ளது.இவ்வளவு செலவு எப்படி வந்தது என்று நிறுவனத்தின் (மெட்ரோ லிங்க் எக்ஸ்பிரஸ் ஃபார் குஜராத் அண்ட் அகமதாபாத்)எம்.டி.யிடம் கேட்ட போது, வரக்கூடிய ரயில் தடத்தை சுற்றியுள்ள நிலத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த பணம் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று நேரில் பார்த்த நிருபர்கள் தெரிவித்தனர்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக