Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 20 மார்ச், 2015

நமதூர் அருகே நடைபெற்ற விபத்து ...


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் சீனிவாசன் (45). இவர், வெளிநாட்டில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த கிராமத்துக்கு வந்த சீனிவாசன் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பிக்க லப்பைக்குடிக்காட்டில் உள்ள தனியார் அலுவலகத்துக்கு திருமாந்துறை கிராமத்திலிருந்து சிற்றுந்தில் புதன்கிழமை சென்றார்.
அப்போது, சிற்றுந்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சீனிவாசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மங்கலமேடு போலீஸார் அங்கு சென்று சீனிவாசன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக