லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பெரம்பலூர் சுற்று வடடார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள், அந்த மாணவர்களை அழைத்து செல்வதற்கு அந்த அந்த பள்ளி கல்லூரி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் இலப்பைக்குடிக்காடு ஊருக்குள் வரும் போது அதிக வேகத்துடன் வருவது மட்டுமல்லாமல், மாணவர்களை வழி கெடுக்கும் விதமாக ஆபாசமான பாடல்களை அதிக சத்தத்துடன்
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கேட்டுவருகின்றன, இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக புகார்கள் எங்களது அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. ஆகையினால் ஐயா அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு அணைத்து பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்குவது மட்டுமல்லாமல், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு :
சம்மந்தப்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இது சம்பந்தமாக புகார் மனுக்களை அனுப்பி உள்ளோம். நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க தவறினால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சிறைபிடிக்கப்படும் என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு :
ஜமீர் உசேன்
(மாநில தனி பிரிவு செயலாளர் )
இந்திய தேசிய லீக் கட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக