புது டெல்லி: சீனாவில் கம்யூனிகேஷன் பல்கலைக்கழக மாதிரியில் புதிய ஊடகவியல் பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.200 கோடி ரூபாய் மதிப்பில் இப்பல்கலைக்கழகத்தை துவக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
மேற்கத்திய ஊடக நிறுவனங்கள் அடிப்படையில் ஊடகவியல் பள்ளிக்கூடங்களாகும்.ஆகவே, அதைவிட மிகச்சிறந்த பீஜிங் மாதிரி பல்கலைக்கழகத்தை தேர்வுச் செய்தோம்’ என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரி தேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஆனால், சீனாவில் மீடியா ஸ்கூலில் வீடியோ எடிட்டிங்கும், டெலிவிசன் ப்ராட்காஸ்டிங்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.இவை சீன அரசின் தணிக்கைக்கு உட்பட்டது.கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களாக ஊடகவியலாளர்களை மாற்றுவதற்காகவே சீனா இந்த பல்கலைக் கழகத்தை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதைப்போலவே மோடி அரசின் ஆதரவாளர்களாக ஊடகவியலாளர்களை மாற்றுவதற்கே மத்திய அரசு இத்திட்டத்தின் மூலம் உத்தேசித்துள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.சீனாவின் ஊடகவியல் பல்கலைக்கழகத்தில் 15000 மாணவர்கள் பயிலுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக