Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 மார்ச், 2015


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யும், அம்மாநில விலங்குகள் பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், மாட்டிறைச்சி விற்போருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சி செய்தபோது, 1995ம் ஆண்டு, அம்மாநில சட்டமன்றத்தில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இம்மாநிலத்தில், 1976ம் ஆண்டு முதல் பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டப்படி, தற்போது காளை மாடு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டுவதும் குற்றமாகும். ஆட்டிறைச்சியின் விலையை விட, மூன்று மடங்கு விலை குறைவான மாட்டிறைச்சியை, ஏழை மக்கள் வாங்குவதாகக் கூறியுள்ள மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இஸ்லாமியர்களின் குர்பானி எனும் கடமையை நிறைவேற்றுவதற்கான தடை உத்தரவாகவே இது பார்க்கப்படுகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக