டெல்லியில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்" என்ற டாக்குமென்ட்ரியை மத்திய அரசு தடைசெய்துள்ளது.
இவ்வாறான இத்தடையானது இந்தியாவின் தந்தையான அரசாங்கம்,இந்தியாவின் மகளுக்கு செய்யும் உதவியா? அல்லது இந்தியாவின் மகளை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு செய்யும் உதவியா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
டெல்லியில் பாதிக்கபட்ட நிர்பயா போல் எத்தனையோ இந்தியாவின் மகள்களான நிர்பயாக்கள் மானத்திற்கு பயந்து எதனையும் வெளிப்படுத்தாமல் மூடிமறைத்தவர்கள் ஏராளம்.
ஆனால் அத்தகைய கோழைத்தனம் இந்தியாவின் தந்தையான அரசாங்கத்திற்கும் இருக்காது என்ற நம்பிக்கையை ஆவனபடத்தை தடைசெய்ததன் மூலம் தகர்த்தெறிந்து விட்டார்கள்.ஆகையால் இந்தியாவின் தந்தையும் (அரசாங்கம்) ஏதோ ஒருவிதத்தில் தந்தையாக (ஆட்சிநடத்த) இருக்க லாயக்கற்றவர்கள் என்பதனை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்கள்.
மக்களாகிய நாமோ அப்பெண் கற்பழிக்கபட்ட சமயத்தில் நாட்டையே போராட்டத்தின் வாயிலாக உலுக்கியெடுத்து விட்டோம்.எனக்கு தெரிந்து அப்போராட்டம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தருவதற்காக அமையபெற்றது.
இப்போது அதே குற்றவாளி அனைத்து வசதிகளுடன் சிறைச்சாலையில் இருந்துகொண்டு,
அப்பெண்ணை கொன்றதற்கான அவனின் பார்வையிலான நியாயத்தை (கற்பழிக்கும்போது ஒத்துழைக்க வேண்டும்!!!!) சொல்லி,
நிர்பயாவின் பிணத்தை தோண்டி மீண்டும் கற்பழித்த சம்பவத்தை போன்ற ஒரு வாக்குமூலத்தை ஆவணபடத்திற்காக கொடுத்து விட்டு அமர்ந்துள்ளான்.
இவனுக்கு அப்படியென்ன கடும் தண்டனை கிடைக்கபட்டுவிட்டது என,அன்று நாட்டை உலுக்கிய நாம் இப்போது அமைதி காண்கிறோம்?
நமக்குள் இருக்கும் உணர்ச்சியும்,கோபமும்,வேகமும் ஒவ்வொரு முறையும் வெளிவர எல்லாநேரமும் ஒரு நிர்பயாவை நாம் தியாகம் பண்ணவேண்டுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக