2027 இல் இஸ்ரேல் இருக்காது
- நேர்காணல் - ஷெய்க் அஹ்மத் யாஸீன்
(மிகப் பிரபலமான ஒரு நேர்காணல் இது. ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஷெய்க் அஹ்மத் யாஸீனை பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸுர் நேர்கண்டார். சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னரான இந்நேர்காணலை சடுதியாக காணக்கிடைத்தது. அதன் சிறியதொரு பகுதி இது. 2027 இல் இஸ்ரேல் இருக்காது என இந்நேர்காணலின் ஷெய்க் அஹ்மத் யாஸீன் வலியுறுத்தி கூறுகிறார்.)
அஹ்மத் மன்ஸுர்: இஸ்ரேல் உருவாகிய 1948 காலப்பகுதியை நீங்கள் கண்டுள்ளீர்கள். அது உருவாகி இப்போது (1998) 50 வருடங்கள் கடந்திருக்கின்றன. அதன் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
அஹ்மத் யாஸீன்: நான் சொல்வது, இஸ்ரேல் அநியாயத்தின் மீதும் கற்பழிப்பின் மீதும் எழுந்துள்ளது. அநியாயம், கற்பழிப்பின் மீதெழும் நாடுகள் எல்லாம் அழிந்தே தீரும்.
அஹ்மத் மன்ஸுர்: நிலைத்து தாக்குப் பிடிக்கக் கூடியவாறான அனைத்து பலத்தை அது கொண்டிருந்தாலுமா?
அஹ்மத் யாஸீன்: பலம் தொடர்ந்து நிலைத்திருப்பதில்லை. உலகத்தில் சக்தி தொடர்ந்து ஒருவரிடம் நிலைத்திருப்பதில்லை. அது அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்னர் வளர்ந்து குழந்தைப் பருவம், வாலிபம், முதுமை என்றாகிறது. பின்னர் அதன் கதை முடிந்து விடுகிறது.
அஹ்மத் மன்ஸுர்: இப்போது நீங்கள் இருக்கும் கட்டம் என்ன?
அஹ்மத் யாஸீன்: இஸ்ரேல் அடுத்த நூற்றாண்டின் முதற் காற்பகுதி வரை இருக்கும். வரையறுத்துச் சொல்வதாயிருந்தால், 2027 இல் இஸ்ரேல் இருக்காது.
அஹ்மத் மன்ஸுர்: எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?
அஹ்மத் யாஸீன்: ஏனென்றால், தலைமுறைகள் ஒவ்வொரு நாட்பது ஆண்டுகளிலும் மாற்றமுறுவதாக அல்குர்ஆன் எமக்குச் சொல்கிறது. முதற் நாட்பதுகளில் நாங்கள் படுகொலை செய்யப்பட்டோம். இரண்டாவதில் இன்திபாழா எழுந்தது. எதிரியை எதிர்கொள்ளல், சவால்விடுதல், போராட்டம், குண்டுகள் எனக் காணப்பட்டது. மூன்றாவது நாட்பதுகளில் இன்ஷா அல்லாஹ் இஸ்ரேலின் நிரந்தர அஸ்தமனம் நிகழும்.
அஹ்மத் மன்ஸுர்: இந்த அவதானத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?
அஹ்மத் யாஸீன்: இது அல்குர்ஆனிலிருந்து பெறப்பட்டது. பனூ இஸ்ரவேலர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 40 வருடங்கள் அவர்கள் அலைந்து திரியச் செய்யப்பட்டது ஏன்? அந்தக் காலம் நோய்வாய்ப்பட்ட களைப்படைந்து திரிந்த சமூகத்தை மாற்றியது. எதிர்வரும் பரம்பரை விடுதலையின் தலைமுறையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
அஹ்மத் மன்ஸுர்: எதிர்காலத்தை எப்படிப் பாரக்கிறீர்கள்.
அஹ்மத் யாஸீன்: நான் சொல்வது, எமது பாதை கஷ்டமானது. அது தியாகங்களையும் பொறுமையையும் வேண்டிநிற்கிறது. ஆனால் எதிர்காலம் எங்களுக்குத்தான். அது சந்தேகமற வரும். அல்லாஹு தஆலா தனது வாக்குறுதிகளை மீற மாட்டான்.
அஹ்மத் மன்ஸுர்: வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? இவ்வுலக வாழ்வில் எதனை சாதிக்க விரும்புகிறீர்கள்?
நான் ஒரு மனிதன். எனது எதிர்பார்ப்பு ஒன்றுதான். அல்லாஹ் என்னை பொருந்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஒரே எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக