இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த வக்கீல் விஸ்வலோசன் மாதன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் நாட்டின் நீதி துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன. ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ‘ஃபத்வா’ உத்தரவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கில் இன்று இறுதி கூறப்பட்ட தீர்ப்பில் , ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஷரியத் கோர்ட்டுகளுக்கு எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இல்லை. தனி மனித உரிமைகளை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்ட விரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக