நேற்று மாலை ஆறு மணிக்கு ஹமாஸ் இயக்க தலைவர் காலித் மிஷ் அல் வெளியிட்ட செய்தி. யாருக்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை, அல்லாஹ்
அவர்களுக்கு நாங்கள் சொல்கின்றோம் நீங்கள் பின்னோக்கிச் செல்லுங்கள்
எங்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது, எங்களைக் தற்காத்துக் கொள்ள
போராடும் உரிமை எங்களுக்கு இருக்கிறது, அதற்கு முழுப்பொறுப்பையூம் உடைய சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுடன் நாங்கள் போராடுகின்றோம்.
தனது அடக்குமுறைகளுக்கும் அடாவடித்தனங்களுக்கும் நாங்கள் எதிர்வினையாற்றக் கூடாது என நெடன்யாஹூ எதிர்பார்க்கின்றாரா கடந்த இரு போராட்டங்களில் நாங்கள் வென்றிருக்கின்றோம், பலஸ்தீன் வெடித்துச் சிதறினால் நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள். நவீன உலகம் எங்கள் விடயத்தில் இரட்டைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றது, எங்களை சுவற்றில் கொண்டுபோய் நெருக்கியுள்ளீர்கள். நாங்கள் சியோனிஸ்டுகளுக்கு சொல்கின்றோம் நீங்கள் நெடன்யாஹு வை கட்டுப்படுத்துங்கள், இன்றேல் கூடிய விரைவில் ஒரு காலம் வரும் அங்கே 67 ஆம் ஆண்டு எல்லைகளுக்கு உற்பட்ட தீர்வொன்றை குறித்து பேசுவதற்கு ஒரு பாலஸ்தீன் மைந்தனும் துணிய மாட்டான் - முற்று முழுதும் - இந்த மண்ணுக்கு உரித்துடைய
மைந்தர்களுடன் தான் நீங்கள் போராடுகின்றீர்கள். பாலஸ்தீன் விடுதலைக்காக போராடும் சகல் அணிகளும் பொறுப்புடன் போராடுகின்றீர்கள் , வேறுபாடுகளைக்களைந்து பொறுப்புடன் போராடுங்கள், உங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது, பாலஸ்தீன் அதிகார சபையும் அதன்
யந்திரமும் காவல்படையினரும் பாலஸ்தீன் மக்களோடு இருந்து
கொள்ளுங்கள். அரபு தேச தலைவர்களே , உங்களில் ஒவ்வொருவருக்கும்
இருக்கின்ற ஆண்மை , உணர்வு , மனிதாபிமானம் , பொறுப்புணர்வு எந்த
அளவில் இருக்கின்றதோ அந்த அளவில் தான் உங்களால் நகர முடியும் , எங்களுக்கு பரந்த முஸ்லிம் உம்மத்தில் நம்பிக்கை இருக்கிறது, சுதந்திர உலகில் நம்பிக்கை இருக்கிறது, எவரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு வெற்றியைத் தருகின்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக