Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 11 ஜூலை, 2014

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம் 68 வங்கிக்கிளைகள் பங்கேற்பு. நமதூருக்கு ஆகஸ்ட் 2 தேதி நேரமுகம்...

பெரம்பலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 26 , ஆகஸ்ட் 2 ம் தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாம்களில் , 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் பங்கேற்க உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு.


ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கியாளர்களும் தங்களது சேவைப்பகுதிக்கு உள்பட்டப மாணவ, மாணவிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 26 ம் தேதி நடைபெறும் முகாமில் பெரம்பலூர் , வேப்பந்தட்டை ஆகிய வட்டங்கள் மற்றும் குரும்பலூர் , அரும்பாவூர் , பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ , மாணவிகளும் , ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெறும் முகாமில் வேப்பூர் , ஆலத்தூர் வட்டங்கள் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்த மாணவ , மாணவிகளும் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் பங்கேற்போர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்கல்வி , உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். வேறு மாவட்டத்திலும் கல்வி பயிலலாம். வங்கியாளர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை மாணவ , மாணவிகள் கொண்டு வந்தால் உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவரும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கடன் முகாமில் தேவைப்பபடும் இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க கிராம நிர்வாக அலூவலர்கள் பங்கேற்கும் சிறப்பு பகுதி அமைக்கப்பட உள்ளது.
கல்விக்கடன் தேவைப்படும் மாணவ , மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் , 10 , 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் , பெற்றொரின் ஊதியச் சான்றிதழ் , வருமான சான்றிதழ் , குடும்ப அட்டை , மருத்துவம் , பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் அல்லது
மற்றும்

என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97885 32233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக