Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 ஜூலை, 2014

அமெரிக்க புகையிலை நிறுவனத்துக்கு கடுமையான அபராதம்!

நுரையீரல் புற்று நோயினால், 18 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் மனைவிக்கு, 23.6 பில்லியன் டாலர்களை வழங்கும்படி அமெரிக்காவின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களில், இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர் ஜெ ரெனால்ட்ஸுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு, பல வருடங்களாக அடிமைப்பட்டிருந்த, தனது கணவர் ராபின்சன், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தமைக்கு அந்த நிறுவனமே காரணம் என்று
மனைவி சிந்தியா வழக்கு தொடர்ந்திருந்தார். புகைப் பிடித்தலினால் ஏற்படக் கூடிய ஆபத்தான் விளைவுகள் குறித்து, சிந்தியாவின் கணவர் ராபின்சன் போன்ற பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க ரெனால்ட்ஸ் நிறுவனம் தவறியதால், அலட்சியம் செய்ததால் அந்த நிறுவனம் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று சிந்தியாவின் வழக்கறிஞர்கள் நான்கு வாரம் வாதாடி வெற்றி கண்டனர். 
அபராதத் தொகை மிக மிக அதிகம் என்றும், மாநிலச் சட்டங்களையும், அமெரிக்க அரசியல் சாசனத்தையும் மீறுகிறது என்று, ரெனாட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் வாதாடினர். 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஃப்ளோரிடா மாநிலத்தில், எந்தவொரு தனியார் வழக்கிலும், இவ்வளவு பெரிய தொகை, நட்ட ஈடாக முன்னர் வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக