ஹர்கதுல் முகவ்வமதுல் இஸ்லாமிய்யா என்ற அரபு பதத்தின் சுருக்கமே ஹமாஸ். எதிர்த்து போராடும் இஸ்லாமிய இயக்கம் என்பது இதன் பொருள். ஷேக் அஹமது யாசீன் அப்துல் அஜீஸ் ரன்திஸி, ஷலாஸ் ஸஹாபா, முகம்மது ஹஸன் ஷமா, இப்ராஹீம் அல் யசூரி, அப்துல் ஃபத்தாஹ் ஹஸன் நோக்கான் மற்றும் இஸ்ஸா அல் நஜ்ஜார் ஆகிய ஏழு நபர்கள் இணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தனர்.
"ஃபாலஸ்தீன் காஸாவில் அல்லாஹ் என்னை ஒரு ஷஹீதாக ஆக்குவான் என்று நம்புகிறேன்" என்று கூறினார். "இன்று காஸா. நாளை ரமல்லாஹ், அதற்கடுத்து ஜெரூஸலம், தொடர்ந்து ஹைஃபா மற்றும் ஜஃபாவிர்கும் நாம் செல்வோம்" என்று கூறினார். ஹைஃபா மற்றும் ஜஃபா ஆகியவை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இஸ்ரேலில் இருக்கும் பிரதேசங்கள்...
"தனி நபர்களை நம்பி நடத்தப்படும் இயக்கம் அல்ல ஹமாஸ் என்பது நிரூபிக்கப்பட்டது. வழிநடத்தி செல்வதற்குகான தலைவர்களை படைத்தவன் தொடர்ந்து அனுப்பினான். அதற்கான தயாரிப்புகளை அவர்களும் மேற்கொண்டனர்"...
"2005ம் ஆண்டு ஹமாஸ் இயக்கத்திற்கும் ஃபாலஸ்தீனியர்களுக்கும் முதலாவது மிகப்பெரும் வெற்றியை அளித்த சம்பவம் அரங்கேறியது. 1967ல் தான் ஆக்கிரமித்த காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய படைகளும் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்த யூதர்களும் முழுமையாக வெளியேறினர். இஸ்ரேலின் இந்த வெளியேற்றம் அவர்களுக்கு ஏற்ப்பட்ட மிகபெரும் தோல்வியாக சித்தரிக்கப்படுகிறது. அத்துடன் ஹமாஸின் வலிமையான போராட்டம்தான் இஸ்ரேலின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது"...
"போராட்டட களத்தில் நீண்ட காலம் பயணித்த ஹமாஸ், 2006ம் ஆண்டு ஜனநாயகத்திலும் வெற்றியை ஈட்டியது. அவ்வருடம் காஸாவில் நடை பெற்ற தேர்தலில் ஹமாஸ் பெருவாரியான இடங்களில் வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா பிரதமராக பதவியேற்றார். ஹமாஸின் வெற்றி இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட போலி ஜனநாயகவாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது"... அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஹமாஸின் தேர்தல் வெற்றியை ஏற்க்க முடியாது என்று மறுத்தனர்...
"ஹமாஸின் திறமையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை என அனைத்தும் ஃபாலஸ்தீனியர்களை ஹமாசுடன் தொடர்ந்து கைகோர்க்க வைத்தது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதளாலும் இந்த பந்தத்தை பிரிக்க இயலவில்லை"...
"இராணுவ ரீதியாகவும், ஹமாஸ் பலம்பெற்று வருகிறது. ஹமாஸால் தயாரிக்கப்படும் ஹஸ்ஸாம் ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்வரை சென்று தாக்கும் சக்தியை பெற்றுள்ளன. இது வரை தெற்கு இஸ்ரேலை மட்டும் தொட்டு வந்த கஸ்ஸாம் ராக்கெட்டுகள் தற்போது மத்திய இஸ்ரேல் வரை செல்வதும் இஸ்ரேலின் கலக்கத்தை அதிகரித்துள்ளது"...
"நவம்பர் மாதம் நடத்தப்பட்ட எட்டு நாள் தாக்குதல் சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரான யகூத் பராக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான பராக் இஸ்ரேலின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ததாகவே நோக்கப்படுகிறது"...
"சர்வதேச அளவில் ஆதரவுகளை ஹமாஸ் குவித்து வந்தாலும் ஃபாலஸ்தீன பூமியில் சில புல்லுருவிகளையும் சந்தித்து வருகின்றனர். ஃபதாஹ் இயக்கம் ஹமாசுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தாலும் தற்போது ஹமாஸ் உடனான உறவில் நேர்மறை போக்கை கையாள ஆரம்பித்துள்ளது. ஆனால், சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஒரு சிலர் ஹமாஸ் இயக்கம் மற்றும் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய இஸ்லாத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் இவர்கள், ஹமாஸ் இயக்கம் மற்றும் ஃபாலஸ்தீன மக்களுக்கு எதிரான அணைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஃபாலஸ்தீனில் பணியாற்றி வரும் வெளிநாடுகளை சார்ந்த சமூக ஆர்வலர்களையும் கொலை செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களையும் எதிர்கொண்டுள்ள ஹமாஸ் சில சமயம் இரும்புக்கரம் கொண்டும் இவர்களை அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் இத்தகைய புல்லுருவிகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை இது நமக்கு உணறித்துகிரது.
ஹமாஸ் வெற்றியில் சமீபத்தில் அத்தியாயமாக இணைந்து கொண்டதுதான் காலித் மிஷ்அலின் ஃபாலஸ்தீன வருகை. எந்த நபரை கொலை செய்ய முயற்சி செய்தார்களோ அதே நபர் இன்று ஃபாலஸ்தீன மண்ணை முத்தமிடுவது இஸ்ரேலியர்களுக்கு பெரும் அவமானமாக உள்ளது. அதுவும் இவரை கொலை செய்ய ஆட்களை அனுப்பிய அதே நெதன்யாகுவின் ஆட்சியிலேயே மிஷ் அலின் காஸா பயணமும் அமைந்தது ஃபாலஸ்தீனியர்களுக்கு இரட்டை சந்தோஷத்தையும் இஸ்ரேலியர்களுக்கு தலைவலியையும் அளித்தது. இத்தகையவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயம் மேலோங்க செய்வான் என்ற அல்குர்ஆனின் வசனம் மீண்டும் ஒருமுறை உண்மைப்படுத்தப்படுகிறது".. ..
போராட்டாம், இரத்த சாட்சிகள், மக்கள் நல்வாழ்வு, ராஜ தந்திரம், அரசாங்கம் என பன்முகத்தன்மையுடன் 25 ஆண்டுகளை ஹமாஸ் கடந்து வந்துள்ளது. தங்களின் போராட்ட உத்திகள் வேண்டுமென்றால் மாறுபடலாம். ஆனால், தங்களின் இலட்சியத்தில் எவ்வித மாறுபாடும் இல்லை என்பதைத்தான் ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன. ஃபாலஸ்தீனை மீட்பதில் ஹமாஸ் இயக்கம் தொடர்ந்து முன்னணியில் நிற்கும். ஃபாலஸ்தீன எழுச்சி இஸ்ரேலின் வீழ்ச்சியில் தான் முடிவுறும். இஸ்ரேல் வீழும் அந்த நாளை நாமும் பிரார்த்தனைகளுடன் எதிர்பார்த்து காத்து நிற்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக